Dhanam serial hosted a party for female auto drivers : விஜய் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் தனம் சீரியலின் விளம்பரத்திற்காக 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீரியல் குழுவினர் விருந்து கொடுத்துள்ளனர்.
ஆட்டோ ஓட்டும் தனம் சீரியலை விளம்பரப்படுத்திய படக்குழு – 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விருந்து!
Dhanam serial hosted a party for female auto drivers : நாளுக்கு நாள் சீரியலின் மோகமும், வருகையும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு சேனல்களும் டிஆர்பி ரேட்டிங்கிற்காக புத்தம் புதிய தொடர்களை போட்டி போட்டு எடுத்து வருகிறார்கள். இதன் காரணமாக சீரியலின் வருகை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் சக்திவேல், செல்லம்மா, பொன்னி, தங்க மகள், மோதலும் காதலும், வீட்டுக்கு வீடு வாசப்படி, மகாநதி, ஆஹா கல்யாணம், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, பாக்கியலட்சுமி, சின்ன மருமகள், சிறகடிக்க ஆசை, அய்யனார் என்று பல சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
24
ஆட்டோ ஓட்டும் தனம் சீரியலை விளம்பரப்படுத்திய படக்குழு – 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விருந்து!
இந்தப் பட்டியலில் தற்போது புதிதாக தனம் என்ற சீரியலும் இணைந்திருக்கிறது. கடந்த 17ஆம் தேதி முதல் தனம் – உங்களில் ஒருத்தி தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் சத்யா தேவராஜன் ஹீரோயினாகவும், ஸ்ரீகுமார் கணேஷ் ஹீரோவாகவும் நடித்து வருகின்றனர். இவர்களுடன் இணைந்து, விஜே கல்யாணி, ஐஸ்வர்யா ரவிச்சந்திரன், ரூபா ஸ்ரீ, ரேணுகா, கிஷோர், அர்ஜுன், ஜெயஸ்ரீ, கோகுல், சொர்ணா, மதன், ரவிவர்மா ஆகியோர் பலரும் நடித்துள்ளனர்.
34
ஆட்டோ ஓட்டும் தனம் சீரியலை விளம்பரப்படுத்திய படக்குழு – 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விருந்து!
இந்த தொடர் ஆட்டோ ஓட்டும் பெண்களை மையப்படுத்திய கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. புத்தம் புதுப்பொலிவுடன் ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த சீரியலின் புரோமோவிற்காக, அதாவது தனம் சீரியலை விளம்பரப்படுத்தும் விதமாக ஆட்டொ ஓட்டும் பெண்களுக்கு விருந்து கொடுத்துள்ளனர். இதற்காக 50 பெண் ஓட்டுநர்களை அழைத்து வந்து அவர்களுக்கு படக்குழுவினர் விருந்து கொடுத்துள்ளனர்.
44
ஆட்டோ ஓட்டும் தனம் சீரியலை விளம்பரப்படுத்திய படக்குழு – 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விருந்து!
பொதுவாக குடும்பத்தில் மூத்த பெண் அல்லது மூத்த பையனாக இருந்தால் அவர்களது தலையில் தான் குடும்பத்தின் மொத்த சுமையும் விழும். அப்படித்தான் தனம் சீரியலும். இதில், குடும்பத்தின் மூத்த மகளான தனம் (சத்யா தேவராஜன்) எதிர்பாராத விதமாக கணவனை இழந்த நிலையில் குடும்பத்தை காப்பாற்ற ஆட்டோ ஓட்டுகிறாள். இந்த சீரியல் ஆட்டோ ஓட்டும் தனத்தின் கதையை மையப்படுத்தி நகர்கிறது. கடந்த 17ஆம் தேதி தொடங்கிய இந்த சீரியல் தற்போது வரையில் 8 எபிசோடுகளை கடந்து இன்று 9ஆவது எபிசோடு ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது.