ஹாலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்? அதிக வசூல் அள்ளிய டாப் 5 பிரான்சைஸ் படங்கள்

Published : Feb 25, 2025, 01:29 PM IST

ஹாலிவுட் படங்கள் என்றாலே ஆயிரம் கோடிக்கு மேல் அசால்டாக வசூல் அள்ளிவிடும், அப்படி ஹாலிவுட்டில் அதிக வசூல் அள்ளிய டாப் 5 பிரான்சைஸ் படங்கள் பற்றி பார்க்கலாம்.

PREV
16
ஹாலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்? அதிக வசூல் அள்ளிய டாப் 5 பிரான்சைஸ் படங்கள்
Top 5 Hollywood Francise

ஹாலிவுட் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது பிரம்மாண்டம் தான். அப்படி தொடர்ச்சியாக தங்கள் படங்களின் மூலம் உலகளவில் தனி ரசிகர் படையயே உருவாக்கி வைத்திருக்கிறது ஹாலிவுட். இந்தியாவிலும் ஹாலிவுட் படங்களுக்கு என தனி மவுசு உண்டு. அண்மையில் கூட இண்டர்ஸ்டெல்லார் படம் ரீ-ரிலீஸ் ஆகி வசூல் சாதனை படைத்திருந்தது. அந்த அளவுக்கு ஹாலிவுட் படங்கள் மீதான மோகம் இந்தியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த தொகுப்பில் ஹாலிவுட்டில் அதிக வசூலை வாரிக்குவித்த டாப் 5 பிரான்சைஸ் பற்றி பார்க்கலாம்.

26
5. பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்

யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் தான் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படங்களை தொடர்ச்சியாக தயாரித்து வருகிறது. இந்த படம் ஒரு பிரான்சைஸாக மாறி இதுவரை இதன் கீழ் 11 படங்கள் வெளியாகி இருக்கின்றன. கார் சேஸிங் காட்சிகள் தான் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படங்களில் ஸ்பெஷல். இந்த பிரான்சைஸில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ஃபியூரியஸ் 7 திரைப்படம் தான் அதிக வசூல் ஈட்டியது. இப்படம் உலகளவில் ரூ.1.52 பில்லியன் டாலர் வசூலித்து இருந்தது. அதேபோல் இந்த பிரான்சைஸின் 11 படங்களின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ.7.32 பில்லியன் டாலர் ஆகும்.

36
4. ஜேம்ஸ் பாண்ட்

ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகளவி தனி கிரேஸ் உண்டு. இதுவரை மொத்தம் 27 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வந்துள்ளன. இதில் கடந்த 2012-ம் ஆண்டு வெளிவந்த ஸ்கை ஃபால் படம் தான் அதிக வசூல் ஈட்டிய ஜேம்ஸ் பாண்ட் படமாகும். இப்படம் உலகளவில் 1.11 பில்லியன் டாலர் வசூலித்து இருந்தது. இதுவரை வெளிவந்த 27 ஜேம்ஸ் பாண்ட் படங்களின் மொத்த வசூல் 7.88 பில்லியன் டாலர் ஆகும்.

இதையும் படியுங்கள்... அடங்காத அசுரனுக்கு அடித்த ஜாக்பாட்... மார்வெல் சினிமேட்டிக் யூனிவர்ஸில் இணையும் தனுஷ்?

46
3. ஸ்பைடர் மேன்

90ஸ் கிட்ஸின் பேவரைட்டான சூப்பர் ஹீரோ என்றால் அது ஸ்பைடர் மேன் தான். சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் இதுவரை மொத்தம் 10 ஸ்பைடர் மேன் படங்கள் வெளிவந்துள்ளன. இதில் கடந்த 2021-ம் ஆண்டு வெளிவந்த ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் திரைப்படம் தான் 1.95 பில்லியன் டாலர் வசூலித்து. அதிக வசூல் ஈட்டிய படமாக உள்ளது. அதுமட்டுமின்றி இந்த பிரான்சைஸில் வெளிவந்த 10 படங்கள் மொத்தமாக 9.03 பில்லியன் டாலர் வசூலை வாரிக்குவித்துள்ளன.

56
2. ஸ்டார் வார்ஸ்

வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட பிரான்சைஸ்களில் ஸ்டார் வார்ஸும் ஒன்று. இதுவரை மொத்தம் 12 ஸ்டார் வார்ஸ் படங்கள் வந்துள்ளன. இதில் கடந்த 2016-ம் ஆண்டு ரிலீஸ் ஆன ‘ஸ்டார் வார்ஸ் : தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ்” திரைப்படம் தான் 2.07 பில்லியன் டாலர் வசூல் உடன் டாப்பில் உள்ளது. இந்த பிரான்சைஸில் வந்த 12 படங்களின் மொத்த வசூல் 10.36 பில்லியன் டாலர் ஆகும்.

66
1. மார்வெல் சினிமேட்டிக் யூனிவர்ஸ்

ஹாலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக திகழ்ந்து வருவது மார்வெல் சினிமேட்டிக் யூனிவர்ஸ் தான். அந்த பிரான்சைஸின் கீழ் இதுவரை 35 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இதில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் தான் அதிக வசூல் ஈட்டியது. இப்படம் 2.8 பில்லியன் டாலர் வசூலித்து இருந்தது. இந்த யூனிவர்ஸின் கீழ் வந்த 35 படங்களின் மொத்த வசூல் 31.48 பில்லியன் டாலர் ஆகும். 

இதையும் படியுங்கள்... "அப்போ இவருக்கும் வயசாகும் போல".. வெளியான ஜாக்கி சானின் லேட்டஸ்ட் போட்டோ - லைக்குகளை குவிக்கும் 90ஸ் கிட்ஸ்!

click me!

Recommended Stories