
சமீப காலமாகவே இயக்குனர்கள், பிரமாண்ட பட்ஜெட்டில், வரலாற்று சிறப்பு மிகுந்த கதைகளை படமாக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்க்கு வழிவகுத்தது, கலைஞர் கைவண்ணத்தில் பிரஷாந்த் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான 'பொன்னர் ஷங்கர்' படம் என்றாலும், இந்த படத்தின் தோல்வியால் வரலாற்று கதைகள் தமிழில் எடுபடாமல் போனது.
இதை தொடர்ந்து, இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய 20 வருட, கனவு படமாக பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகமாக எடுத்து முடித்தார். ரூ.500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் முதல் பாகமே பாக்ஸ் ஆபிசில் ரூ.500 கோடி வசூல் செய்த நிலையில், இரண்டாவது பாகம் ரூ.350 கோடி வசூல் செய்தது.
Keerthy Suresh: 47 வயசு நடிகருக்கு கீர்த்தி சுரேஷை பெண் கேட்டு போன இயக்குனர்! காரணம் யார் தெரியுமா?
இதே போல், வரலாற்று மற்றும் ஃபேண்டஸி கதையம்சத்துடன் உருவான படம் தான் 'கங்குவா'. ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். ஒரு முழு படமாக பார்க்க இந்த படம் சிறந்த படம் என்றாலும், முதல் அரைமணி நேர படத்தின் கதையில் ஏற்பட்ட தொய்வு மற்றும் பேக் கிரவுண்ட் இசையில் உணர முடிந்த இரைச்சல் போன்றவை இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் வர காரணமாக அமைந்தது. ரூ.2000 கோடி வசூல் செய்யும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்த நிலையில்... ரூ.200 கோடி கூட வசூல் செய்யாதது இந்த படத்தின் மிகப்பெரிய தோல்வியாக பார்க்கப்பட்டது.
இதையெல்லாம் மிஞ்சும் விதத்தில் தற்போது ரூ.700 கோடியில் புதிய படம் எடுக்க உள்ளதாக கூறி பவள இயக்குனர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். மம்மூட்டி, முரளி, அப்பாஸ், சினேகா, தேவயானி, ரம்பா ஆகியோர் பலரது நடிப்பில் 2001 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ஆனந்தம். இந்த படம் மூலமாக வெற்றி பட இயக்குனராக ரசிகர்கள் மத்தியில் தன்னை நிலைநிறுத்தி கொண்டவர் தான் இயக்குனர் லிங்குசாமி. இந்தப் படத்திற்கு பிறகு ரன், ஜி, சண்டக்கோழி, பீமா, பையா, வேட்டை, அஞ்சான், சண்டக்கோழி 2, தி வாரியர் போன்ற படங்களை இயக்கினார்.
கடைசியாக தமிழ் சினிமாவில் சண்டக்கோழி 2 படத்தை இயக்கினார். அவருக்கு இந்தப் படம் ஹிட் கொடுக்கவில்லை. இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் தமிழில் சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது மீண்டும் புதிய படம் இயக்க உள்ளதாக அறிவித்துளளார். அந்தப் படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.700 கோடி என கூறப்படுகிறது.
மேலும், இந்த படம் பார்ட் 1 மற்றும் பார்ட் 2 என இரு பாகங்களாக உருவாக உள்ளதாம். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அர்ஜூனன் மற்றும் அபிமன்யு ஆகிய 2 கதாபாத்திரங்களை வைத்து 2 பாகமாக ஒரு படம் இயக்க இருக்கிறேன். இந்தப் படத்திற்கு பட்ஜெட் ரூ.700 கோடி. புதிய தொழில்நுட்பங்களுடன் இந்தப் படம் உருவாக இருக்கிறது. ஏற்கனவே மகாபாரதம் தொடர்பான சீரியல்கள் வந்தாலும் அர்ஜூனன் மற்றும் அபிமன்யுவின் கதையை மையப்படுத்தி தனித்தனி படமாக இந்தப் படம் உருவாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.