விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாகவும், கலக்க போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகியுள்ள இன்று பலர் பின்னணி பாடகர்களும், காமெடி நடிகர்கள் மற்றும் ஹூரோவாக கூட சிலர் ஜெயித்துள்ளனர்.
அந்த வகையில் கிராமத்தில் இருந்து வந்து, கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இன்று திரைப்படங்களிலும் தலை காட்ட துவங்கியுள்ளவர் சரத்.
இவர் தீனாவுடன் சேர்ந்து செய்த காமெடிகள் வேற லெவலில் இருக்கும்.
இந்நிலையில் இவருக்கும், இவருடைய காதலி கிருத்திகா என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன், திருமண நிச்சயம் முடிந்த நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக திருமணம் தள்ளிவைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து இவர்களுக்கு இன்று திருமணம் இனிதே நிறைவடைந்துள்ளது. இவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.