கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறிமுகமான, சிலர் இன்று வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களாக உள்ளனர். இதற்க்கு மிகப்பெரிய எடுத்து காட்டு என்றால், அது சிவகார்த்திகேயன் எனலாம்.
விஜய் டிவி பிரபலங்களின், பலருக்கும் மிகவும் பிடித்த KPY போட்டியாளராகவும், பின்னர் தொகுப்பாளராகவும் இருந்தவர் தீனா. எந்த பிரபலம் குறித்து இவரிடம் கேள்வி ஏழுப்பினாலும் மிகவும் சைலெண்டாக கமெண்ட் சொல்லி சிரிக்க வைத்து விடுவார்.
சமீபத்தில் தான் தன்னுடைய சொந்த ஊரில்... பிரமாண்டமான வீடு ஒன்றை கட்டிய தீனா. இதை தொடர்ந்து நாளை திருமண உறவிலும் இணைய உள்ளார். இவருடைய திருமணம் அவரின் சொந்த ஊரான திருவாரூரில் நடைபெற உள்ளதாகவும், இதில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையை சேர்ந்த பலர் கலந்து கொள்வார்கள் என எதிரிபார்க்கப்படுகிறது.