விஜய் டி.வி.யின் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. க்யூட்டான ஸ்மைல், கலகலப்பான பேச்சால் கவரப்பட்ட ரசிகர்கள் இவரை செல்லமாக டிடி என அழைக்கின்றனர். இவரது சகோதரி ப்ரியதர்ஷினியும் தொகுப்பாளியாக உள்ளார். திவ்ய தர்ஷினி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
இவற்றில் பெரும்பாலானவை சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தவை. “ஜோடி நம்பர்1”,“சூப்பர் சிங்கர்”, “காபி வித் த டிடி”, “ஹோம் ஸ்வீட் ஹோம்” போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில மாதங்களுக்குள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பின்னர் டி.வி. நிகழ்ச்சிகளில் முழு கவனம் செலுத்தி வரும் டிடி, சினிமாவில் வெயிட்டான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார்.
அவ்வப்போது சமூக வலைத்தளங்களில், ரசிகர்களுடன் கலந்துரையாடுவதையும் பழக்கமாக கொண்டுள்ளார். அதே போல் தன்னுடைய மனதில் பட்ட கருத்தை பளீச் என தெரிவிப்பவர்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் டிடியிடம், ஒரு ரசிகர்... உங்களுடைய பழைய வாழ்க்கை உங்களது தற்போதைய மகிழ்ச்சியினை பாதிக்கின்றதா? அதை நீங்க எப்படி கையாளுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்க்கு பதிலளித்த டிடி, அப்படி எதுவும் எனக்கு கிடையாது. ஒரு தடவை முடிந்துவிட்டால் முடிந்துவிட்டது தான். அதை என்றும் திரும்பி பார்க்கக் கூடாது. அதில் கிடைக்கும் பாடத்தை மட்டும் நாம் கற்றுக் கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டிய தான். அடுத்து என்ன வாழ்க்கையில் என்பதை பார்த்துக் கொண்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும். சும்மா பழசை நினைத்து கொண்டு அழுது கொண்டு இருப்பதில் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை' என்று பதிலளித்துள்ளார். டிடியின் இந்த பதில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
அதே போல்... மற்றொரு ரசிகர், இரண்டாவது காதல் மீது நம்பிக்கை உள்ளதா? என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்க்கு பதிலளித்த டிடி, "முதல் காதல், இரண்டாவது காதல் என படத்தில் காட்டியது போல் எதுவும் கிடையாது. ஒரே நேரத்தில் நான்கைந்து பேரை காதலித்தால் தான் தவறு. ஆனால் வாழ்க்கையில் 1, 2 காதல் வருவது தவறில்லை ' என கூறியுள்ளார்".