கொரோனா தொற்றால் திரைப்பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து மரணமடைவது கோலிவுட்டை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இயக்குநர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, காமெடி நடிகர் பாண்டு, பாடகர் கோமகன், துணை நடிகர் மாறன் உள்ளிட்டோர் கொரோனா தொற்றால் அடுத்தடுத்து மரணமடைந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியது.

இன்று காலையில் கூட அசுரன், வடசென்னை, காலா, லாபம் உள்ளிட்ட படங்களில் நடித்த நிதீஷ் வீரா கொரோனா தொற்றால் மரணமடைந்தார் என்ற செய்தி பேரிடியாக அமைந்தது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை எடுத்து அவர் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். இவருடைய மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா தொற்றால் நமக்கு நெருக்கமானவர்களை இழப்பது என்பது மீளா முடியாத வலியை தரக்கூடியது. அப்படியிருக்கையில் நடிகரும், இயக்குநருமான அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கொரோனா தொற்றுக்கு பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பேஷன் டிசைனரான சிந்துஜாவிற்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த செய்தியைக் கேள்விப்பட்ட நடிகர் சிவகார்த்திகேயன் நேரடியாக மயானத்திற்கே சென்று அஞ்சலி செலுத்தினார். தன்னுடைய நண்பரான அருண் ராஜா காமராஜுக்காக தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் சிவகார்த்திகேயன் கனா என்ற படத்தை தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஆர்டிக்கிள் 15 என்ற இந்தி பட ரீமேக்கில் நடித்து வரும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் சிந்துஜா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தியும் தன்னுடைய இறுதி மரியாதையை செலுத்தினார்.

அத்துடன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “நேர்த்தியான இயக்குனர் - நுட்பமான திரைக்கலைஞர் சகோதரர் @Arunrajakamaraj
அவர்களின் மனைவி சிந்துஜா மறைந்தது அறிந்து வேதனையுற்றேன். அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினேன். அருண்ராஜாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய சகோதரி சிந்துஜாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆழ்ந்த இரங்கல் என்றும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.