Top 5 Tamil Actors who Investing in Real Estate
சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகின்றனர். அதிலும் ஹீரோக்களின் சம்பளம் தற்போது 100 கோடிக்கு மேல் சென்று விட்டது. இம்புட்டு சம்பளம் வாங்கும் நடிகர்கள், அதை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில் ரியல் எஸ்டேட்டில் அதிக முதலீடு செய்த டாப் 5 தமிழ் நடிகர்கள் பற்றியும், அவர்கள் எத்தனை கோடி முதலீடு செய்துள்ளார்கள் என்பது பற்றியும் பார்க்கலாம்.
Suriya
சூர்யா
ரியல் எஸ்டேட்டில் அதிக முதலீடு செய்த நடிகர்கள் பட்டியலில் நடிகர் சூர்யா 5ம் இடத்தில் உள்ளார். இவர் சென்னையில் நிறைய கமர்ஷியல் இடங்களில் முதலீடு செய்திருக்கிறார். இதுதவிர குடும்பத்துடன் மும்பையில் குடியேறிய சூர்யா, அங்கு சொந்தமாக பிளாட் ஒன்றை வாங்கி இருக்கிறார். அதில் சகல வசதிகளும் உள்ளன.
Dhanush
தனுஷ்
நடிகர் தனுஷும் ரியல் எஸ்டேட்டில் அதிகம் முதலீடு செய்துள்ளாராம். குறிப்பாக சென்னையின் பிரைம் லொக்கேஷன்களில் இவர் அதிகம் முதலீடு செய்திருக்கிறாராம். அண்மையில் சென்னையில் பணக்கார ஏரியாவாக கருதப்படும் போயஸ் கார்டனில் தனுஷ் ஒரு வீடு ஒன்றை கட்டினார். அதன் மதிப்பு ரூ.150 கோடியாம்.
இதையும் படியுங்கள்... 12 ஆண்டுகளுக்கு முன் விஜய் கைவிட்ட படம்; தூசிதட்டி எடுக்கும் விஷால்!
Ajith
அஜித்
ரியல் எஸ்டேட்டில் கோடி கோடியாய் முதலீடு செய்த நடிகர்கள் பட்டியலில் அஜித் 3ம் இடத்தில் உள்ளார். அமைதியான அலப்பறை இல்லாத வாழ்க்கையை விரும்பும் அஜித், சுற்றுலாத் தளங்களில் நிறைய முதலீடு செய்திருக்கிறாராம். இவருக்கு சொந்தமாக வெளிநாடுகளிலும் சொத்துக்கள் உள்ளனவாம்.
vijay
விஜய்
ரியல் எஸ்டேட்டில் அதிக முதலீடு செய்த நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர் விஜய் 2ம் இடத்தில் இருக்கிறார். இவர் சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் முதலீடு செய்திருக்கிறாராம். இவர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்த தொகை மட்டும் 500 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
Rajini
ரஜினிகாந்த்
ரியல் எஸ்டேட்டில் அதிக முதலீடு செய்த நடிகர் என்றால் அது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தானாம். சினிமாவை போல் ரியல் எஸ்டேட்டிலும் இவர் சூப்பர்ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். இவர் இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் கமர்ஷியல் இடங்கள் மட்டுமின்றி பண்ணை வீடு, விவசாய நிலம் என நிறைய இடங்களில் முதலீடு செய்திருக்கிறாராம்.
இதையும் படியுங்கள்... அஜித்தை பாத்துதான் நான் என்னை உருவாக்கிக் கொண்டு இருக்கேன்: நடிகர் மணிகண்டன்!