
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மொத்தம் 24 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அதில் இருந்து பவித்ரா, விஷால், செளந்தர்யா, முத்துக்குமரன், ரயான் ஆகிய ஐந்து பேர் மட்டுமே பைனலுக்கு சென்றுள்ளனர். இவர்களில் முத்துக்குமரன் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இரண்டாவது இடத்துக்கு தான் கடும் போட்டி நிலவி வந்தது. அதில் செளந்தர்யாவை விட அதிக வாக்குகள் வாங்கி விஷால் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார். இதையடுத்து 3வது இடம் செளந்தர்யாவுக்கு கிடைத்துள்ளது. எஞ்சியுள்ள பவித்ரா மற்றும் ரயான் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறார்கள். இந்நிலையில், பிக் பாஸ் பைனலிஸ்ட் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முத்துக்குமரன்
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் சம்பளமாக வாங்கி இருக்கிறார். அவர் மொத்தம் இருந்த 105 நாட்களுக்கு அவருக்கு 10 லட்சத்து 50 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர அவர் டைட்டில் வின்னர் ஆனதால் ரூ.40 லட்சத்து 50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளதோடு, அவர் பணப்பெட்டி டாஸ்கில் ஓடி எடுத்து வந்த ஐம்பதாயிரமும் கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கிறது.
ரயான்
முத்துக்குமரனுக்கு அடுத்தபடியாக கம்மி சம்பளம் வாங்கிய போட்டியாளர் என்றால் அது ரயான் தான். இவர் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தாலும் தன்னுடைய திறமையால் பைனல் வரை முன்னேறி அசத்தி இருக்கிறார். இவர் மொத்தம் இந்த வீட்டில் 77 நாட்கள் தங்கி இருந்தார். அதற்காக அவருக்கு ஒரு நாளை ரூ.12 ஆயிரம் வீதம் 9 லட்சத்து 24 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது. அதோடு இவர் பணப்பெட்டி டாஸ்கில் ரூ.2 லட்சம் வென்றுள்ளார்.
இதையும் படியுங்கள்... பிக் பாஸ் தமிழ் சீசன் 8: அதிகம் பேசப் படாத டாப் 3 பிக் பாஸ் பைனலிஸ்ட்!
செளந்தர்யா
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் மூன்றாம் இடம் பிடித்த செளந்தர்யாவுக்கும் ஒரு நாளைக்கு ரூ.12 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது. அவர் மொத்தம் இந்த வீட்டில் 105 நாட்கள் தங்கி இருந்தார். அதற்கு மொத்தமாக அவருக்கு ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம்.
விஜே விஷால்
பிக் பாஸ் தமிழ் சீசன் 8-ல் இரண்டாம் இடம்பிடித்த போட்டியாளர் விஜே விஷால். இவருக்கு ஒரு நாளை ரூ.15 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இவர் மொத்தம் தங்கியிருந்த 105 நாட்களுக்கு 15 லட்சத்து 75 ஆயிரம் சம்பளமாக வாங்கி இருக்கிறார். அதுமட்டுமின்றி இவர் ரூ.5 லட்சத்துக்கான பணப்பெட்டியையும் வென்றிருக்கிறார்.
பவித்ரா ஜனனி
பிக் பாஸ் சீசன் 8 பைனலிஸ்டுகளில் அதிக சம்பளம் வாங்கியவர் என்றால் அது பவித்ரா தான். இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இவர் மொத்தம் இருந்த 105 நாட்களுக்கு சேர்த்து ரூ.21 லட்சம் சம்பளமாக பெற்றிருக்கிறார். அதோடு ரூ.2 லட்சத்துக்கான பணப்பெட்டியையும் பவித்ரா வென்றிருக்கிறார்.
இதையும் படியுங்கள்... பிக் பாஸ் டைட்டில் வின்னர் அறிவிப்பு; கோப்பையுடன் - ரொக்க பரிசை வென்றது யார் தெரியுமா?