தல வந்தா தள்ளிப்போய் தான் ஆகணும்; டிராகன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

Published : Jan 19, 2025, 07:47 AM IST

பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் டிராகன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

PREV
14
தல வந்தா தள்ளிப்போய் தான் ஆகணும்; டிராகன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்
Dragon Movie

ஜெயம் ரவி நடித்த கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அப்படத்தின் அதிரிபுதிரியான வெற்றியை தொடர்ந்து அவர் இயக்கிய படம் லவ் டுடே. இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார் பிரதீப். லவ் டுடே திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்திற்கு பின்னர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஹீரோவாக நடிக்க பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

24
Dragon Movie Pradeep, Anupama

அதன்படி தற்போது அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்து வருகிறார் பிரதீப். அதில் ஒரு படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். அப்படத்திற்கு லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தை நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும், செவன் ஸ்கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் சீமான், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்... அஜித்தை பாத்துதான் நான் என்னை உருவாக்கிக் கொண்டு இருக்கேன்: நடிகர் மணிகண்டன்!

34
Dragon Movie Postponed

இதுதவிர பிரதீப் ரங்கநாதன் கைவசம் உள்ள மற்றொரு படம் டிராகன். இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், வருகிற பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று டிராகன் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என பொங்கலை ஒட்டி அறிவிப்பு வெளியானது.

44
Dragon Movie Release Date Changed

ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, டிராகன் படக்குழு தங்கள் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ளனர். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதீப், தல வந்தா தள்ளிப் போய் தான ஆகணும் என குறிப்பிட்டு, டிராகன் படம் பிப்ரவரி 21ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளார். டிராகன் படக்குழுவின் இந்த முடிவுக்கு அஜித் ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... அப்பாவை போலவே புள்ள; கார் ரேஸில் முதல் பரிசை தட்டி தூக்கிய அஜித் மகன் ஆத்விக்! குவியும் வாழ்த்து!

Read more Photos on
click me!

Recommended Stories