ஏழை, எளியோருக்கு உதவி செய்யும் அளவிற்கு என்னிடம் காசு இருக்கு : இது தான் ஆசீர்வாதம்; சாய் பல்லவி!

Published : Jan 18, 2025, 10:13 PM IST

Sai Pallavi said that I have enough money to help others : மற்றவர்களுக்கு உதவி செய்யும் அளவிற்கு என்னிடம் காசு இருக்கிறது என்று சாய் பல்லவி கூறியுள்ளார்.

PREV
14
ஏழை, எளியோருக்கு உதவி செய்யும் அளவிற்கு என்னிடம் காசு இருக்கு : இது தான் ஆசீர்வாதம்; சாய் பல்லவி!
Sai Pallavi Networth, Sai Pallavi Filmography

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து இருப்பவர் நடிகை சாய் பல்லவி. பிரேமம் படம் மூலமாக பிரபலமானார். ஆனால், அதற்கு முன்னதாக கஸ்தூரி மான் மற்றும் தாம் தூம் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இந்த படங்களில் அவரது கதாபாத்திரம் பேசப்படவில்லை. இதையடுத்து தியா, மாரி 2 படங்களில் நடித்தார். தனுஷ் நடிப்பில் வந்த மாரி 2 படத்தில் நல்ல வரவேற்பு பெற்றார். அதோடு ரௌடி பேபி பாடலும் பட்டி தொட்டியெங்கும் டிரெண்டானது. அதிக பார்வைகளை கடந்து சாதனையும் படைத்தது.

24
Amaran Movie, Sai Pallavi Upcoming Movies

மாரி 2 படத்திற்கு பிறகு என்ஜிகே, பாவ கதைகள், லவ் ஸ்டோரி, கார்கி ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், எந்தப் படத்திற்கும் போதுமான வரவேற்பு இல்லை. இந்த நிலையில் தான் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் அவரை சினிமாவின் உச்சத்திற்கே கொண்டு சென்றுவிட்டது. மறைந்த தமிழக வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்திய இந்தப் படத்தில் முகுந்த் வரதராஜனின் மனைவியான இந்து ரெபேக்கா வர்கீஸாக சாய் பல்லவி நடித்திருந்தார்.

34
Sai Pallavi Filmography

இந்தப் படத்தில் அவரது நடிப்பில் ஒவ்வொருவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. ரூ.200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.335 கோடி வரையில் வசூல் குவித்தது. இந்தப் படத்திற்கு பிறகு இப்போது தண்டெல் என்ற தெலுங்கு படத்திலும் 2 ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த சாய் பல்லவி தனது குடும்பக் கதையை பற்றி பேசியிருக்கிறார். அதில், சின்ன வயசுல நாங்கள் பணக்காரர்கள் என்று நினைத்தேன். ஆனால், மற்றவர்களுக்கு உதவி செய்யும் அளவிற்கு எங்களிடம் பணமில்லை.

44
Sai Pallavi Upcoming Movies

இப்போது, ஏழை எளிய மக்களுக்கும், இல்லாதவர்களுக்கும் உதவி செய்ற அளவிற்கு என்னிடம் காசு இருக்கிறது. இது தான் ஆசிர்வாதமாக நான் கருதுகிறேன் என்று அவர் கூறியிருக்கிறார். சாய் பல்லவியின் நிகர சொத்து மதிப்பு மட்டும் ரூ.47 கோடி என்று கூறப்படுகிறது. அமரன் படத்திற்கு சாய் பல்லவி ரூ.3 கோடி வரையில் சம்பளம் வாங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories