2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு முதல் பிளாக்பஸ்டர் ஹிட்டை கொடுத்தது விஷால் தான். சுந்தர் சி இயக்கத்தில் அவர் நடித்த மதகஜராஜா திரைப்படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்டு வருகிறது. இதில் என்ன ஆச்சர்யம் என்றால், இப்படம் கடந்த 12 ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருந்து தற்போது ரிலீஸ் ஆகி இருக்கிறது. சந்தானத்தின் காமெடி, விஷாலின் ஆக்ஷன், அஞ்சலி மற்றும் வரலட்சுமியின் கிளாமர் என பக்கா கமர்ஷியல் படமாக இருந்ததால் மதகஜராஜா இந்த ஆண்டின் பொங்கல் வின்னராக மாறி உள்ளது.