ரசிகர்களுக்கு விபூதி அடித்த வெற்றிமாறன்; விடுதலை 2 ஓடிடி ரிலீஸில் நடந்த ட்விஸ்ட்

First Published | Jan 19, 2025, 10:02 AM IST

வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 திரைப்படம் ஓடிடி தளத்தில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதைப்பார்த்த ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.

viduthalai part 2

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் நடித்த திரைப்படம் தான் விடுதலை. இதன் முதல் பாகம் கடந்த 2023-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. விடுதலை முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்தனர். இப்படம் முழுக்க நடிகர் விஜய் சேதுபதி நடித்த பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.

Vijay Sethupathi, Vetrimaaran, Soori

இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார். மேலும் கென் கருணாஸ், கெளதம் மேனன், வேல்ராஜ். தமிழ், ராஜீவ் மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருந்தார். இப்படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எல்ரட் குமார் தயாரித்து இருந்தார். விடுதலை முதல் பாகத்தை காட்டிலும் அதன் இரண்டாம் பாகம் பெரியளவில் சோபிக்கவில்லை.

இதையும் படியுங்கள்... சூரி ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கும் 'மாமன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!

Tap to resize

Viduthalai 2 OTT Release

அப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரியளவில் லாபம் ஈட்டித் தரவில்லை. விடுதலை படத்தின் ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனம் கைப்பற்றி இருந்தது. இதனால் இப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் போது 1 மணிநேரம் கூடுதல் காட்சிகளோடு வெளியிடப்பட வாய்ப்பு இருப்பதாக இயக்குனர் வெற்றிமாறன் பேட்டிகளில் கூறி இருந்தார். இதனால் ஓடிடியில் 3 மணிநேரம் 45 நிமிட படமாக விடுதலை 2 ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது எந்தவித முன் அறிவிப்பும் இன்றி விடுதலை 2 படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்துள்ளனர்.

Viduthalai 2 Released on Amazon Prime

அதன்படி விடுதலை 2 திரைப்படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது. அதுவும் uncut வெர்ஷனாக இல்லாமல், தியேட்டரில் ரிலீஸ் ஆன அதே ரன்னிங் டைமோடு தான் அமேசான் பிரைம் ஓடிடியிலும் விடுதலை 2 ரிலீஸ் ஆகி உள்ளது. இதனால் அதன் uncut வெர்ஷன் பார்க்க ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. அதுமட்டுமின்றி ஜீ5 தளத்தில் இருந்து இப்படம் அமேசான் பிரைமிற்கு எப்படி தாவியது என்பது புரியாத புதிராக உள்ளது.

இதையும் படியுங்கள்... போல்டு கண்ணனாக விஜய் சேதுபதி; தூள் கிளப்பும் Ace படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ

Latest Videos

click me!