பாதியில் நிறுத்தப்பட்ட ஷூட்டிங்... அவசர அவசரமாக சென்னை திரும்பிய விஜய், அஜித் - ஐதராபாத்தில் என்ன பிரச்சனை?

First Published | Jul 27, 2022, 1:40 PM IST

தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ள வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னரே விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் ஏகே 61 படங்களின் ஷூட்டிங் தொடங்கும் என கூறப்படுகிறது.

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தில் ராஜு தயாரிக்க இதில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், சம்யுக்தா, பிரபு, பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது.

அதேபோல் நடிகர் அஜித் நடிப்பில் தயாராகி வரும் ஏகே 61 படத்தின் படப்பிடிப்பும் ஐதராபாத்தில் தான் நடைபெற்று வந்தது. இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இதில் அஜித்துடன் மஞ்சு வாரியர், ஜான் கொக்கேன், வீரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இதையும் படியுங்கள்... ப்ளீஸ் அநத மாதிரி பிகினி போட்டோ போடுங்க...ஷெரினிடம் கெஞ்சி கேட்ட நெட்டிசன்...ஆசையை நிறைவேற்றிய ஷெரின்..

Tap to resize

இந்நிலையில், ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் ஏகே 62 படங்களின் ஷூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதற்கு காரணம் அங்குள்ள தயாரிப்பாளர் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது தான். ஓடிடி தளங்கள், டிக்கெட் விலை மற்றும் விபிஎஃப் கட்டணம் உயர்வு உள்ளிட்டவற்றை எதிர்த்து வருகிற ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதனால் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே அங்கு நடைபெற்று வந்த விஜய், அஜித் படங்களின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே விஜய், அஜித் இருவருமே தமிழகம் திரும்பிவிட்டனர். நடிகர் அஜித் தற்போது திருச்சியில் உள்ள ரைபிள் கிளப்பில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ள வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னரே வாரிசு மற்றும் ஏகே 61 படங்களின் ஷூட்டிங் தொடங்கும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... 'சின்ன வயதில் நடித்த படம்' 'காட்டேரி குறித்து வரலட்சுமி!

Latest Videos

click me!