Sherin
கன்னட மாடல் அழகியான ஷெரின், தமிழ் சினிமாவில் செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். முதல் படத்திலேயே இளம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்தார்.
Sherin
இதையடுத்து தமிழில் அடுத்தடுத்து சிபிராஜுடன் ஸ்டூடண்ட் நம்பர் ஒன் மற்றும் ஜெர்ரி இயக்கிய விசில் போன்ற படங்களில் நடித்தார். விசில் படத்தில் நெகடிவ் ரோலில் கலக்கி இருப்பார். குறிப்பாக அப்படத்தில் இடம்பெறும் அழகிய அசுரா பாடலில் இவர் ஆடிய கவர்ச்சி நடனம் இன்று வரை இளசுகளை சீண்டி பார்க்கிறது. இறுதியாக தமிழில் உற்சாகம் திடைப்படத்தில் நடித்தார்.
Sherin
இணையத்தில் செம்ம ஆக்டிவாக இருக்கும் ஷெரின் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் கொண்டவர். அவ்வப்போது, ரசிகர்களுடன் உரையாடுவார், அவர்கள் கேட்கும் கேள்விக்கும் பதில்சொல்லி வருகிறார். இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் நெட்டிசன் ஒருவர், பிகினி புகைபடத்தை பதவிடுமாறு ஷெரினிடம் கேட்டிருந்தார்.