பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி யின் மறைவு உலகம் முழுவதும் உள்ள அவரது ஒட்டு மொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது.
இவருடைய உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாத ரசிகர்கள் பலர், தாமரைப்பாக்கத்தில் எஸ்.பி.பி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு செல்கிறார்கள்.
மேலும் திரையுலகில் அவருடன் நேரடியாக பழகும் பாக்கியம் கிட்ட பலர், தங்களுடைய அனுபவங்களையும் அவர் பழகும் விதம் குறித்தும் கண்கலங்கியபடி கூறினர்.
அந்த வகையில் பிரபல நடிகை வனிதா, எஸ்.பி.பிக்கு இரங்கல் தெரிவித்ததோடு, விஜய்யிடம் எஸ்.பி.பி பாடலை பாட சொல்லி தொந்தரவு செய்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
வனிதா முதல் முதலில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ’சந்திரலேகா’ என்ற திரைப்படத்தில் தான் அறிமுகமானார்.
அவருடன் இணைந்து நடித்தபோது எஸ்பிபி பாடிய ’மலரே மௌனமா’ என்ற பாடலை அடிக்கடி விஜய்யை பாட சொல்லி தான் தொந்தரவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஒரு நிலையில் தன்னுடைய தொல்லை தாங்காமல் விஜய் அவ்வப்போது எனக்காக அந்த பாடலை பாடுவார் என்றும் வனிதா தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.