நடிகர் விஜய் சேதுபதி, முரட்டு வில்லனாக நடித்திருந்த 'மாஸ்டர்' திரைப்படம் ஜனவரி மாதம், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியானது. தளபதி விஜய்க்கே செம்ம டஃப் கொடுக்கும் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.
'மாஸ்டர்' படத்தில் விஜய் சேதுபதியின் சிறிய வயது கெட்அப்பில் நடித்திருந்தனர், மகேந்திரன். தன்னை நிரூபிக்க சரியான வாய்ப்பு கிடைக்காமல் போராடி இவருடைய திறமையை இந்த கதாபாத்திரம் உலகறிய வைத்தது.
'மாஸ்டர்' படத்திற்கு பின், தரமான கதைகள் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்கவும் தயாராகி விட்டார் மஹேந்திரன்.
இந்நிலையில் இவர், சமீபத்தில் ஒரு புதிய கார் ஒன்றை வாங்கினார். இந்த காரின் சாவியை, தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கையில் கொடுத்து பெற்று கொண்டார்.
தற்போது மகேந்திரன் கார் வாங்கிய செய்தியை கேள்வி பட்டதும், நடிகர் விஜய் சேதுபதி, அவருடைய வீட்டிற்கே சென்று வாழ்த்தியுள்ளார்.
இந்த புகைப்படங்களை, குட்டி பவானி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு 'என்னுடைய பவானி' என பதிவிட்டுள்ளார். இதற்க்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.