இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல்களின்படி, 'விக்ரம்' படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி தெலுங்குப் படத்தில் மற்றொரு நெகட்டிவ் ரோலில் நடிக்கவுள்ளார். மகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு , பூஜா ஹெக்டே நடிக்கும் படத்திற்காக விஜய் சேதுபதியிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.