தமிழ் சினிமாவுக்கு 1000 கோடி வசூல் என்பது எட்டாக்கனியாக இருந்து வந்தாலும், தமிழ் சினிமா நட்சத்திரங்கள் சிலர் பிற மொழிகளில் 1000 கோடி வசூல் அள்ளிய படங்களில் நடித்துள்ளனர். அதைப்பற்றி பார்க்கலாம்.
பான் இந்தியா படங்கள் வரத் தொடங்கிய பின்னர் தென்னிந்திய படங்களுக்கு இந்தியா முழுவதும் மவுசு அதிகரிக்க ஆரம்பித்தது. அதை கருத்தில் கொண்டு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இருந்து தொடர்ச்சியாக பான் இந்தியா படங்கள் வந்த வண்ணம் உள்ளன. இதில் தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் இருந்து வந்த புஷ்பா 2, ஆர்.ஆர்.ஆர், பாகுபலி, கேஜிஎஃப் 2 போன்ற பான் இந்தியா படங்களில் பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடி என்கிற மேஜிக் நம்பரை எட்டிவிட்டன. ஆனால் தமிழ் சினிமாவில் விஜய், ரஜினி, அஜித் போன்ற பல பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள் இருந்தும் இதுவரை ஒரு படம் கூட 1000 கோடி வசூலை எட்டியதில்லை. இருப்பினும் பிற மொழிகளில் 1000 கோடி வசூல் அள்ளிய படங்களில் தமிழ் நடிகர்களின் பங்களிப்பு இருந்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.
26
சத்யராஜ்
1000 கோடி வசூல் அள்ளிய முதல் தென்னிந்திய படம் என்கிற பெருமையை பெற்றது பாகுபலி 2. அப்படத்தில் மிகப்பெரிய டர்னிங் பாயிண்ட் ஆக இருந்தது சத்யராஜ் நடித்த கட்டப்பா கேரக்டர் தான். அப்படத்தில் கட்டப்பாவாக நடிக்க சரியான சாய்ஸ் ஆக சத்யராஜ் இருந்தார். அவரின் நடிப்பு அவருக்கு பான் இந்தியா அளவில் அங்கீகாரத்தை கொடுத்தது. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் ஏராளமான பான் இந்தியா படங்களில் நடித்து வருகிறார் சத்யராஜ்.
36
சமுத்திரக்கனி
இயக்குநர் சமுத்திரக்கனி தற்போது பிசியான நடிகராக உருவெடுத்துவிட்டார். அவர் தமிழைக் காட்டிலும் தெலுங்கில் மோஸ்ட் வாண்டட் ஆக்டர் என்கிற அந்தஸ்துக்கு உயர்ந்துவிட்டார். அவரின் கால்ஷீட்டுக்காக தெலுங்கு டைரக்டர் காத்திருக்கும் சூழல் இருக்கிறது. இவர் தெலுங்கில் ராஜமெளலி இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் போலீஸ் ஆக நடித்திருந்தார். அப்படம் 1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடிக்கும் படங்களைக் காட்டிலும் வில்லனாக நடிக்கும் படங்களுக்கு செம மவுசு உண்டு. அப்படி இந்தியில் அட்லீ இயக்கிய ஜவான் படத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து அசத்தி இருந்தார் விஜய் சேதுபதி. அப்படம் கடந்த 2023-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் ஹிட் அடித்தது.
56
கமல்ஹாசன்
இந்த பட்டியலில் உலகநாயகன் கமல்ஹாசனும் இருக்கிறார். அவர் வில்லனாக நடித்த படம் ஒன்று 1000 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. அந்த படம் வேறெதுவுமில்லை கல்கி 2898ஏடி தான். இப்படத்தில் யாஷ்கின் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கமல். இப்படம் கடந்த 2024-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார்கள். இதிலும் கமல் நடிக்கிறார்.
66
மாதவன்
1000 கோடி வசூல் படத்தில் நடித்த மற்றுமொரு தமிழ் நடிகர் தான் மாதவன். இவர் லேட்டஸ்டாக தான் இந்த லிஸ்ட்டில் இணைந்தர். இந்தியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி சக்கைப்போடு போட்ட துரந்தர் திரைப்படத்தின் மூலம் 1000 கோடி கிளப்பில் இணைந்தார் மாதவன். அப்படத்தில் அஜய் சன்யால் என்கிற உளவுத்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மாதவன். தற்போது துரந்தர் படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.