விஜய் சேதுபதி மகனுக்கு விபூதி அடித்த ரசிகர்கள்; பீனிக்ஸ் படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவு கம்மியா?

Published : Jul 05, 2025, 12:53 PM IST

விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி நாயகனாக அறிமுகமான பீனிக்ஸ் திரைப்படம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் படு மோசமாக வசூலித்து உள்ளது.

PREV
14
Phoenix Veezhan Day 1 Box Office

சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்டாக சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின்னர், சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. கடின உழைப்பால் சினிமாவில் அடுத்தடுத்த உயரங்களை தொட்ட விஜய் சேதுபதி, இன்று பான் இந்தியா அளவில் செம பிசியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். இவருக்கு சூர்யா சேதுபதி என்கிற மகன் இருக்கிறார். இவரும் விஜய் சேதுபதி உடன் நானும் ரெளடி தான், சிந்துபாத் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

24
ஹீரோவாக அறிமுகமான விஜய் சேதுபதி மகன் சூர்யா

இந்த நிலையில், பீனிக்ஸ் என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார் சூர்யா சேதுபதி. அவரது முதல் படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு தான் இயக்கி உள்ளார். இப்படத்தில் தேவதர்ஷினி, வரலட்சுமி சரத்குமார் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர், நடிகைகளும் நடித்துள்ளனர். பீனிக்ஸ் திரைப்படம் அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி இருந்தது. இப்படத்திற்காக பிரத்யேகமாக சண்டைப் பயிற்சி எடுத்து நடித்துள்ளார் சூர்யா. பீனிக்ஸ் திரைப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்து உள்ளார். இப்படம் ஜூலை 4ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

34
வரவேற்பை பெறாத பீனிக்ஸ்

பீனிக்ஸ் திரைப்படத்தை தன் மகன் உடன் சேர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் புரமோட் செய்தார். இருந்தாலும் இப்படத்திற்கு பெரியளவில் ஹைப் கிடைக்கவில்லை. புரமோஷன் நிகழ்ச்சிகளில் சூர்யா நடந்து கொண்ட விதம் சிலருக்கு பிடிக்காததால் அவரை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வந்தனர். விஜய் சேதுபதி போல் கஷ்டப்பட்டு சினிமாவிற்குள் வராமல், தன் தந்தை தயவோடு ஈஸியாக வந்துவிட்டதாக விமர்சித்து வந்தனர். இந்த விமர்சனங்களுக்கு மத்தியில் பீனிக்ஸ் படம் ரிலீஸ் ஆனதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இருப்பினும் சூர்யா ரிஸ்க் எடுத்து ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளதாக பாராட்டி வருகின்றனர்.

44
பாக்ஸ் ஆபிஸில் பலத்த அடி வாங்கிய பீனிக்ஸ்

பீனிக்ஸ் திரைப்படம் சித்தார்த், சரத்குமார் நடித்த 3 பி.ஹெச்.கே, இயக்குனர் ராம் இயக்கிய பறந்துபோ ஆகிய படங்களுக்கு போட்டியாக ரிலீஸ் ஆனது. மற்ற இரண்டு படங்களைக் காட்டிலும் பீனிக்ஸ் படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் சுமாரான வசூல் மட்டுமே கிடைத்துள்ளது. பீனிக்ஸ் படம் முதல் நாளில் வெறும் 10 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளதாம். இது மற்ற இரண்டு படங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வசூல். பறந்து போ திரைப்படம் முதல் நாளில் ரூ.42 லட்சமும், 3 பிஹெச்கே திரைப்படம் முதல் நாளில் ரூ.1 கோடிக்கு மேலும் வசூலித்திருந்தன. அதோடு ஒப்பிடுகையில் பீனிக்ஸ் படு மோசமாக வசூலித்துள்ளது. வீக் எண்ட்டில் இப்படத்தின் வசூல் பிக் அப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories