கார்த்திக்கு வில்லனாக நடிக்க முடியாது..விஜய் சேதுபதியின் முடிவால் அப்செட் ஆன படக்குழு!

First Published | Jul 9, 2022, 12:47 PM IST

தற்போது இவர் 35 கோடி சம்பளத்தில்  பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் வெப் சீரிஸில் நடிக்க உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தியை விஜய் சேதுபதி புறக்கணிப்பது குறித்து ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

actor karthi

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகனும் சூர்யாவின் தம்பியுமான கார்த்திக் வெளிநாட்டு படிப்பை முடித்துவிட்டு சாக்லேட் பாயாக சென்னை திரும்பினார். இவர் முதலில் ஆயுத எழுத்து படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.

actor karthi

புசுபுசுவென பார்ப்பவர்களின் கண்களை கவரும் அழகுடன் இருந்த கார்த்தியை காட்டுமிராண்டியாக மாற்றினார் அமீர். இவரின் முதல் படமான "பருத்திவீரன்" மாபெரும் வெற்றியை கண்டது. இதற்கென சிறந்த நடிகருக்கான ஃபிலிம் பேர் விருது, தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, சிறந்த ஆண் அறிமுகத்திற்கான விஜய் விருது என அடுக்கடுக்கான விருதுகளை முதல் படத்திலேயே பெற்றார் கார்த்தி.

மேலும் செய்திகளுக்கு..பிரேமம் நிவின் பாலியா ? ..குண்டாகி ஆளே அடையாளம் தெரியாம ஆகிட்டார்!

Tap to resize

actor karthi

தற்போது இவர் கைவசம் விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் உள்ளிட்ட படங்கள் உள்ளன. இதில் பொன்னியின் செல்வனில் வந்திய தேவனாக நடித்துள்ளார் கார்த்தி. விருமன்  படம் ரிலீசுக்கு காத்திருக்க , சர்தார்  படபடப்பில் உள்ளது. இந்நிலைகள் கார்த்தியின் மற்றொரு படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகி உள்ளன. "குக்கூ " இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி புதிய படத்தில்  நடிக்க உள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..சாய்பல்லவிக்கு வந்த சோதனை... நீதிமன்ற தீர்ப்பால் செம்ம அப்செட்!!

Actor Karthi

ஏற்கனவே கார்த்தி நடித்த தோழா படத்திற்கு ராஜு முருகன் வசனம் எழுதி இருக்கிறார். இந்த படத்தின் மூலம் ஏற்பட்ட நட்பின் தொடர்ச்சியாக கார்த்தியின் புதிய படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இவர் இயக்கத்தில் வெளியான  குக்கூ, ஜோக்கர் படங்கள் பாராட்டுகளை பெற்றதோடு ,  இதில் ஜோக்கர் படத்திற்கு சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது கிடைத்தது.  இதனால் ராஜு முருகன் மீது ஒரு நன்னம்பிக்கை ரசிகர்களுக்கு உண்டு.

vijay sethupathi - karthi

தற்போது புதிய தகவலாக கார்த்திக்கு வில்லனாக விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்ய இயக்குனர் முடிவு செய்துள்ளார். ஏற்கனவே ரஜினி, விஜய், கமல், அல்லு அர்ஜுன், ஷாருக்கான் உள்ளிட்டவர்களுக்கு வில்லனாக கமிட் ஆகியுள்ள விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும் என பட குழு முடிவு செய்திருந்தது.

மேலும் செய்திகளுக்கு..அரசர்கள் புடை சூழ அரங்கேறிய பொன்னியின் செல்வன் டீசர் நிகழ்ச்சி ! கலர்புல் போட்டோஸ் இதோ..

vijay sethupathi

இதுகுறித்த விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்டபோது, தனக்கு போதுமான கால்ஷீட் இல்லை என்று கூறியதோடு,  30 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பளம் கட்டுப்படியாகது என  தயாரிப்பு நிறுவனம் யோசித்ததால் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

vijay sethupathi

தற்போது இவர் 35 கோடி சம்பளத்தில்  பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் வெப் சீரிஸில் நடிக்க உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தியை விஜய் சேதுபதி புறக்கணிப்பது குறித்து ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

Latest Videos

click me!