ஜவான் ஓவர்... நெக்ஸ்ட் ‘சர்தார்’ கார்த்திக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி..!

Published : Jul 14, 2023, 04:01 PM ISTUpdated : Jul 14, 2023, 04:02 PM IST

ஜப்பான் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய விஜய் சேதுபதி தற்போது கார்த்தியின் அடுத்த படத்தில் வில்லனாக மிரட்ட இருக்கிறாராம்.

PREV
14
ஜவான் ஓவர்... நெக்ஸ்ட் ‘சர்தார்’ கார்த்திக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி, தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவானார். இதையடுத்து சில ஆண்டுகள் ஹீரோவாக கலக்கி வந்த அவர், ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். இதையடுத்து விஜய்யின் மாஸ்டர் படத்தில் பவானி என்கிற டெரரான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார்.

24

தொடர்ந்து விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதி அடுத்ததாக விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடித்திருந்தார். இப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஹீரோவை விட வில்லன் வாய்ப்புகள் அதிகளவில் குவியத் தொடங்கின. தற்போது இவர் பாலிவுட்டில் வில்லனாக அறிமுகமாகி உள்ளார். அட்லீ இயக்கியுள்ள ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

இதையும் படியுங்கள்... தளபதிக்கே தளபதியாக இருப்பவர்! யார் இந்த புஸ்ஸி ஆனந்த்... விஜய்யுடன் நெருக்கமானது எப்படி?

34

ஹீரோவாக நடிப்பதை விட வில்லனாக நடிக்க அதிகளவில் சம்பளம் வழங்கப்படுவதால், அவரும் அடுத்தடுத்து வில்லனாக நடிக்க கமிட் ஆகி உள்ளார். அந்த வகையில் விஜய் சேதுபதி அடுத்ததாக கார்த்திக்கு வில்லனாக நடிக்க உள்ளாராம். கார்த்தி நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளது. அதில் தான் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

44

சர்தார் 2 படத்திற்கான ஸ்கிரிப்ட் தயார் செய்யும் பணியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளார் இயக்குனர் பி.எஸ்.மித்ரன். கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ஜப்பான் திரைப்படத்திலும் விஜய் சேதுபதியை தான் முதலில் வில்லனாக நடிக்க வைக்க இருந்தனர். ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் அப்படத்தில் இருந்து விலகிவிட்டார். ஜப்பானில் மிஸ் ஆன இந்த கூட்டணி சர்தார் 2-வில் இணையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... அட்ரா சக்க அடித்து பிடித்து முதலிடத்தை தட்டி தூக்கிய பிரபல சீரியல்! டாப் 5 தொடர்களின் TRP லிஸ்ட் இதோ!

Read more Photos on
click me!

Recommended Stories