"பான் இந்தியா மூவினா என்ன? புதிய விளக்கம் தந்த விஜய் சேதுபதி...

Kanmani P   | Asianet News
Published : May 02, 2022, 02:08 PM ISTUpdated : May 02, 2022, 02:11 PM IST

காத்துவாக்குல ரெண்டு காதல் ஹிட் கொடுத்துவரும் நேரத்தில் பான் இந்தியா படங்கள் குறித்து விஜய் சேதுபதி பேசியிருப்பது வைரலாகி வருகிறது.

PREV
19
"பான் இந்தியா மூவினா என்ன?  புதிய விளக்கம் தந்த விஜய் சேதுபதி...
vijay sethupathi

முன்னணி நாயகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் நடிகராக மட்டுமல்லாமல் வில்லன், சிறப்பு வேடங்கள் என பன்முகம் காட்டி வருகிறார். அதோடு பாடலாசிரியர், தயாரிப்பாளராகவும் துணிந்து உள்ளார் விஜய் சேதுபதி

29
kathuvakula rendu kadhal

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படம் செம ஹிட் கொடுத்து வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா என இரு நாயகிகள் இடம் மாற்றிக்கொள்ளும் நாயகன் சந்திக்கும் இன்னல்களை படத்தின் மையக் கதை அமைக்கப்பட்டுள்ளது.

39
KaathuvaakulaRenduKaadhal

நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வரும் இந்த படம் பாக்ஸ் ஆபீசிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் விஜய் சேதுபதி.

மேலும் செய்திகளுக்கு...ஆலியா பட்டுக்கு தேசிய விருது? கங்குபாய் படத்தை வர்ணித்த பிரபல இயக்குநர் ...ஆனால், இது மட்டும் இல்லாமல் போச்சே.

49
KaathuVaakula Rendu Kaadhal

நானும் ரவுடி தான் வெற்றிக்குப் பிறகு மீண்டும் அதே கூட்டணியை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கி உள்ள காத்துவாக்குல ரெண்டு  காதல் படம் கடந்த மாதம்  28ஆம் தேதி ரிலீஸ் ஆனது.
 

59
KaathuVaakula Rendu Kaadhal

மூன்று பிரபலங்கள் நடித்துள்ள இந்த படத்தை ஸ்கிரீன் ஸ்டுடியோ உடன் விக்னேஷ், நயன்தாராவின் சொந்த தயாரிப்பான ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.

69
KaathuVaakula Rendu Kaadhal

படம் வெளியாகும் முன்னரே அனிரூத் இசையமைப்பில் வெளியாகியிருந்த டூடூடூ   பாடல் செம ஹிட்  கொடுத்திருந்தது. இதையடுத்து இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள், டீசர் படம் குறித்த எதிர்பார்ப்பை எகிற வைத்து இருந்தது.

மேலும் செய்திகளுக்கு...Acharya : அட்டர் ஃபிளாப் ஆன ‘ஆர்.ஆர்.ஆர்’ நாயகனின் ஆச்சார்யா.... இதுக்கு பீஸ்ட் எவ்ளவோ பரவால்ல போலயே

79
KaathuVaakula Rendu Kaadhal

முக்கோண காதல் கதையை மையமாக கொண்ட காத்துவாக்குல ரெண்டு காதல் படம் முதல்நாளில் 66 லட்சத்தை சென்னையில் மட்டும் வசூலித்து உள்ளதாகவும், தமிழகத்தில் மொத்தம் ரூபாய் 5 கோடி வரை வசூலித்ததாகவும், இரண்டாம் நாள் முடிவில் மொத்தம் 8 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
 

89
vijay sethupathi

இந்நிலையில் சமீபத்தில் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாயகன் விஜய் சேதுபதி, பான் இந்தியா படம் குறித்து கலகலப்பான பேட்டி அளித்துள்ளார். அதாவது டப்பிங் செய்யப்பட்ட அனைத்து படங்களையும் மக்கள் பார்க்கிறார்கள். அப்படியென்றால் அனைத்து படங்களையும் பான் இந்தியா படங்கள் என்று கூறலாம் என கூறியுள்ளார்.

99
vijay sethupathi

அதோடு படம் நன்றாக இருந்தால் அனைவரும் பார்ப்பார்கள். அது பான் இந்தியா மட்டுமல்ல பான் வேர்ல்ட் என்றே கூறலாம்' என்று கலகலப்பான பதில் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி.

Read more Photos on
click me!

Recommended Stories