Vikram kamal Pair : மகள் வயது நடிகையுடன் ரொமான்ஸ்...! விக்ரம் படத்தில் கமலுக்கு ஜோடி யார் தெரியுமா?

Published : May 02, 2022, 01:49 PM IST

Vikram kamal Pair : விக்ரம் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகையை சஸ்பென்ஸாக வைத்திருந்தனர். தற்போது அது யார் என்கிற தகவல் லீக் ஆகி உள்ளது.

PREV
15
Vikram kamal Pair : மகள் வயது நடிகையுடன் ரொமான்ஸ்...! விக்ரம் படத்தில் கமலுக்கு ஜோடி யார் தெரியுமா?

மாநகரம், கைதி, மாஸ்டர் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தற்போது விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார். கமல் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய  நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

25

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சி உள்ளதால் இதற்கான புரமோஷன் பணிகளும் வேகமெடுத்துள்ளன. அண்மையில் கோவையில் இருந்து பெங்களூரு செல்லும் டபுள் டக்கர் ரெயில் முழுவதும் விக்ரம் பட போஸ்டர்கள் வரையப்பட்டு இயங்கத் தொடங்கியது.

35

இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு 3 பேர் ஜோடியாக நடிப்பதாக கூறப்பட்டது. அதன்படி பிக்பாஸ் சிவானி, தொகுப்பாளினி மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி ஆகியோர் நடித்துள்ளனர். அதேபோல் கமலுக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகையை சஸ்பென்ஸாக வைத்திருந்தனர். தற்போது அது யார் என்கிற தகவல் லீக் ஆகி உள்ளது.

45

அதன்படி கன்னடத்தில் இளம் நடிகையாக வலம் வரும் ஷான்வி ஸ்ரீவஸ்தவா என்பவர் தான் கமலுக்கு ஜோடியாக நடித்துள்ளாராம். 29 வயதாகும் இவர் 67 வயதாகும் கமலுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளது ஆச்சர்யமாக இருந்தாலும், அதில் ஒரு டுவிஸ்டும் வைத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். 

55

விக்ரம் படத்தில் கமல்ஹாசனின் இளம் வயது கதாபாத்திரம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதற்காக ரூ.10 கோடி செலவு செய்து, ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கமல்ஹாசனின் 30 வயது கதாபாத்திரம் ஒன்றை படத்தில் வைத்துள்ளனர். அந்த கதாபாத்திரத்திற்கு ஜோடியாக தான் ஷான்வி நடித்துள்ளாராம்.  

இதையும் படியுங்கள்... Acharya : அட்டர் ஃபிளாப் ஆன ‘ஆர்.ஆர்.ஆர்’ நாயகனின் ஆச்சார்யா.... இதுக்கு பீஸ்ட் எவ்ளவோ பரவால்ல போலயே

Read more Photos on
click me!

Recommended Stories