கமலை ஓவர்டேக் செய்த விஜய் சேதுபதி; டிஆர்பி-யில் சாதனை படைத்த பிக் பாஸ் 8 பைனல்

Published : Jan 31, 2025, 11:43 AM IST

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங் புது சாதனை படைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
கமலை ஓவர்டேக் செய்த விஜய் சேதுபதி; டிஆர்பி-யில் சாதனை படைத்த பிக் பாஸ் 8 பைனல்
கமலை மிஞ்சிய விஜய் சேதுபதி

பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் முதன்முறையாக இந்தியில் தொடங்கப்பட்டது. அங்கு சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி மாபெரும் ஹிட் ஆனதால் பிற மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதால், அதற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. அதுமட்டுமின்றி முதல் சீசனே வேறலெவலில் ஹிட் ஆனதால் இந்நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

24
பிக் பாஸ் தமிழ் சீசன் 8

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் 7 சீசன்களை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். இதில் ஐந்தாவது சீசனின் போது கமல்ஹாசனுக்கு கொரோனா வந்தபோது ஒரு எபிசோடு மட்டும் அவரால் பங்கேற்க முடியவில்லை. அதனால் அவருக்கு பதில் அந்த எபிசோடை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். மற்ற அனைத்து எபிசோடையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். 7வது சீசனுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகினார் கமல்ஹாசன்.

இதையும் படியுங்கள்... பவித்ரா பிறந்தநாள்; கும்பலாக வந்து கொண்டாடிய பிக் பாஸ் பிரபலங்கள்!

34
பிக் பாஸ் தொகுப்பாளர் விஜய் சேதுபதி

ஷூட்டிங்கில் பிசியானது மற்றும் ஏஐ தொழில்நுட்பம் தொடர்பாக அமெரிக்காவுக்கு படிக்க சென்றது போன்ற காரணங்களால் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகியதால் அவருக்கு பதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்கினார். முதல் எபிசோடிலேயே சிக்சர் அடித்த விஜய் சேதுபதி, தன்னுடைய வெளிப்படையான பேச்சால் ரசிகர்களை கவர்ந்தார். அவர் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அண்மையில் நிறைவடைந்தது.

44
பிக் பாஸ் 8 பைனல் டிஆர்பி

அடுத்த சீசனையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்குவார் என விஜய் டிவி நிர்வாகமே சூசகமாக அறிவித்துவிட்டது. இதற்கு காரணம் இந்த சீசனில் அவர் தொகுத்து வழங்கிய எபிசோடுகளுக்கு கிடைத்த டிஆர்பி தான். அது பைனலிலும் எதிரொலித்தது. அதன்படி இந்த சீசனின் பைனல் மட்டும் 6.88 டிஆர்பி புள்ளிகளை பெற்றிருக்கிறது. இது கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் பைனலுக்கான டிஆர்பி ரேட்டிங்கை விட அதிகமாம். 

இதையும் படியுங்கள்... பிக் பாஸ் சீசன் 8ன் ரெளடி பேபி! இந்த க்யூட் குழந்தை யாருன்னு தெரியுதா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories