உலக நாயகன் கமல்ஹாசனுக்கு கடந்த ஆண்டு நடிகராக ஒரு மறக்கக்கூடிய ஆண்டாக இருந்தாலும் தயாரிப்பாளராக மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. கமல்ஹாசனின் கெரியலில் இதுவரை எந்த படத்திற்கும் அவர் இந்த அளவுக்கு ட்ரோல்களை சந்தித்ததில்லை. அப்படி ஒரு கசப்பான அனுபவத்தை அவருக்கு இந்தியன் 2 திரைப்படம் கொடுத்திருந்தது.
25
தக் லைஃப் கமல்ஹாசன்
மறுபுறம் அவர் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த அமரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் மழை பொழிந்தது. சிவகார்த்திகேயன் கெரியரிலேயே அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை அமரன் படைத்தது. இப்படத்தின் மூலம் 100 கோடிக்கு மேல் லாபம் பார்த்திருந்தார் கமல்ஹாசன். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்தார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார்.
அமரன் படம் ரிலீஸ் ஆகும் முன்னரே நடிகர் கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுவிட்டார். அங்கு ஏஐ தொழில்நுட்பம் தொடர்பாக படிக்க சென்றிருந்த கமல்ஹாசன், கடந்த 5 மாதங்களாக இந்தியா பக்கம் தலைகாட்டவே இல்லை. தற்போது ஒருவழியாக தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு வெற்றிகரமாக இன்று சென்னைக்கு திரும்பி இருக்கிறார் கமல்ஹாசன். சென்னை வந்ததும் அவர் தன்னுடைய படங்கள் பற்றி அடுக்கடுக்கான அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
45
தக் லைஃப் ரிலீஸ் தேதி
அதன்படி, சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தபோது, தக் லைஃப் படம் எந்த நிலையில் இருக்கிறது என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு வருகிற ஜூன் 5ந் தேதி தக் லைஃப் படம் ரிலீஸ் ஆகும் என கூறினார். பின்னர் விக்ரம் 2 வருமா என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு தான் தற்போது வேறு ஒரு ஸ்கிரிப்டை எழுதி முடித்து வந்திருப்பதாக கூறிச் சென்றார். அவர் சொன்ன அந்த புது ஸ்கிரிப்ட், அன்பறிவு இயக்கும் படத்திற்கானதாக இருக்கலாம்.
55
கமல்ஹாசன் கைவசம் உள்ள படங்கள்
கமல்ஹாசன் கைவசம் தற்போது தக் லைஃப், இந்தியன் 3, கல்கி 2, அன்பறிவு இயக்கும் படம் ஆகியவை உள்ளன. இதில் தக் லைஃப் படத்தை மணிரத்னம் இயக்கி இருக்கிறார். இப்படம் ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. அதேபோல் ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்துள்ள இந்தியன் 3 படமும் இந்த ஆண்டு திரைக்கு வர உள்ளது. அப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டாலும் இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட இருக்கிறதாம்.