பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி 105 நாட்கள் நடைபெற்றது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி, இந்த ஆண்டு ஜனவரி மாதம் 19-ந் தேதி முடிவடைந்தது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில், மொத்தம் 24 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் பவித்ரா, ரயான், முத்துக்குமரன், விஷால், செளந்தர்யா ஆகியோர் மட்டுமே பைனலுக்கு முன்னேறி சென்றனர். இவர்களில் ரயான் மற்றும் பவித்ராவுக்கு கடைசி 2 இடம் கிடைத்தது.
24
வாழ்த்திய பிக் பாஸ் பிரபலங்கள்
அதேபோல் விஜே விஷாலுக்கு 3ம் இடமும், செளந்தர்யாவுக்கு 2ம் இடமும் கிடைத்த நிலையில் முத்துக்குமரன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு 40 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலையும், பிக் பாஸ் டிராபியும் வழங்கப்பட்டது. பிக் பாஸ் முடிந்ததும் போட்டியாளர்கள் அனைவரும் ஜாலியாக தங்கள் நண்பர்களுடன் அவுட்டிங் சென்று வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் ரயான் நடித்த மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் திரைப்படம் ரிலீஸ் ஆனதால் அதன் ப்ரீமியர் ஷோ பார்க்க பிக் பாஸ் பிரபலங்கள் ஆஜராகினர்.
இதையடுத்து விஜய் டிவியில் நடைபெற்றுள்ள கம்பெனி என்கிற ரியாலிட்டி ஷோவில் முத்துக்குமரன், செளந்தர்யா, அன்ஷிதா, தர்ஷிகா, பவித்ரா, ஜெஃப்ரி, சத்யா ஆகியோர் பங்கேற்றனர். அந்நிகழ்ச்சி இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில், பிக் பாஸ் பைனலிஸ்ட் பவித்ரா நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிக் பாஸ் பிரபலங்களும் கலந்துகொண்டு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.
44
பிக் பாஸ் பிரபலங்களுடன் கொண்டாடிய பவித்ரா
குறிப்பாக பிக் பாஸ் வீட்டில் அவரை துரத்தி துரத்தி ஆனந்த தொல்லை கொடுத்து வந்த ராணவ், கோவா கேங்கை சேர்ந்த ரயான், செளந்தர்யா மற்றும் நடிகை ஆர்.ஜே.ஆனந்தி ஆகியோர் சர்ப்ரைஸாக வந்து பவித்ராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விஜய் டிவி சீரியல் நடிகை ஷியாமந்தாவும் பங்கேற்றிருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.