நடிகர் விஜய் சேதுபதி தற்போது இந்தியா முழுவதும் பேமஸ் ஆகிவிட்டார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களை இவர் கைவசம் வைத்துள்ளார். சமீப காலமாக விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் படங்கள் சக்கைப்போடு போடுகின்றன. அந்த வகையில் இவர் வில்லனாக மிரட்டிய உப்பென்னா, மாஸ்டர், விக்ரம், பேட்ட ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தன.
நடிகர் விஜய்சேதுபதி, அடுத்ததாக புஷ்பா 2 படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் முதல் பாகத்திலேயே அவர் வில்லனாக நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்சனை காரணமாக கடைசி நேரத்தில் அப்படத்தில் இருந்து அவர் விலகினார். இதையடுத்து அவருக்கு பதில் பகத் பாசிலை நடிக்க வைத்தனர்.