பாலிவுட்டில் விஜய் சேதுபதியின் அறிமுக படத்துக்கு ஆப்பு வச்ச கொரோனா - ரிலீஸ் பிளானை அதிரடியாக மாற்றிய படக்குழு

First Published Jan 26, 2022, 6:45 AM IST

விஜய் சேதுபதி பாலிவுட்டில் அறிமுகமான படம் மும்பைகார். இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. 

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிசியாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. வில்லன், கதாநாயகன், குணசித்திர வேடம், என எது கொடுத்தாலும் அதற்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக்கொண்டு நடித்து, ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களிலும் நடித்து பான் இந்தியா நடிகராக வலம் வருகிறார்.

தற்போது இவர் கைவசம் காத்துவாக்குல ரெண்டு காதல், யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன், கடைசி விவசாயி, விடுதலை, இடம் பொருள் ஏவல், விக்ரம், மெர்ரி கிறிஸ்துமஸ், மும்பைகார், காந்தி டாக்ஸ் என டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. 

அந்த வகையில், விஜய் சேதுபதி பாலிவுட்டில் அறிமுகமான படம் மும்பைகார். இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கி உள்ளார். இது தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற மாநகரம் என்கிற தமிழ் படத்தின் இந்தி ரீமேக் ஆகும். தமிழில் முனீஸ்காந்த் நடித்திருந்த கதாபாத்திரத்தில் தான் இந்தியில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
 

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக ‘மும்பைகார்’ படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்துள்ளனர். அதன்படி இப்படத்தை ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளதாம்.

விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நடிகர் விஜய் சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம், அனபெல் சேதுபதி ஆகிய படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி உள்ள நிலையில், விரைவில் மும்பைகார் படமும் அந்த பட்டியலில் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!