வெப் சீரிஸில் நடிக்க விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா?... விஜய், அஜித்தையே மிஞ்சிய சங்கதியா இருக்கே...!

First Published Feb 3, 2021, 6:36 PM IST

தமிழில், மக்கள் செல்வன் என்று பெயர் எடுத்து விட்ட, விஜய் சேதுபதி காமெடியில் இருந்து நாயகனாக தாவியவர்களே மீண்டும் கதாநாயகனாக மட்டும் தான் நடிப்பேன் என அடம் பிடித்து வரும் நிலையில், சினிமாவின் ட்ரெண்டையே மாற்றியுள்ளார்.
 

ஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோல், குணச்சித்திர வேண்டாம் என அசால்ட் செய்து வருகிறார்.
undefined
இப்படி பல்வேறு கதாபாத்திரங்களை மாறி மாறி நடித்து வருவதால், ஒரு மாதிரி நடிப்பை வெளிப்படுத்தாமல் பல்வேறு பரிமாணங்களில் தோன்றி ரசிகர்களை மகிழ்விப்பதோடு, தற்போதைய முன்னணி ஹீரோக்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.
undefined
குறிப்பாக மாஸ்டர் படத்தில், தளபதி விஜய்யின் நடிப்பை விட விஜய் சேதுபதியின் நடிப்பு ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. விரைவில் பவானிக்கு என்று ஒரு படமும் உருவாக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
undefined
இந்த நிலையில் தற்போது திரைப்படத்தை தாண்டி, இந்தி வெப்தொடர் ஒன்றில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆனார்.
undefined
இந்த தொடரில் விஜய்சேதுபதியுடன் சாஹித் கபூர் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
undefined
இந்த நிலையில் இந்தத் தொடரில் நடிக்கும் விஜய் சேதுபதியின் சம்பளம் நாயகனாக நடிக்கும் ஷாகித் கபூரின் சம்பளத்தைவிட அதிகம் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
undefined
இந்தத் தொடரின் முதல் பாகத்தில் நடிக்கும் சாஹித் கபூருக்கு சம்பளம் ரூபாய் 40 கோடி என்றும் விஜய்சேதுபதிக்கு 55 கோடி என்றும் வெளிவந்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
undefined
தமிழ் திரையுலகில் நாயகனாக நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு சம்பளம் ரூபாய் 10 முதல் 15 கோடி இருக்கும் நிலையில் பாலிவுட் திரையுலகின் வெப்தொடர்களில் நடிக்க அவருக்கு 50 கோடிக்கும் மேல் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக வெளியான தகவல் கேட்பவர்களையே தலை சுற்ற வைத்துள்ளது.
undefined
இந்த தொடரில் ராஷிகண்ணா நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் இந்த தொடரை ராஜ் மற்றும் டீகே இயக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரை அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் தயாரித்து வருகிறது.
undefined
15 கோடி சம்பளத்தில் இருந்து, ஒரேயடியாக 55 கோடி விஜய் சேதுபதி சம்பளம் வாங்க உள்ளதாக கூறப்படுவது, விஜய் - அஜித்தையே மிஞ்சிய சங்கதியாக உள்ளது என கோடம்பாக்கம் வட்டாரத்தில் கிசுகிசுத்து வருகிறார்கள்.
undefined
click me!