“விவசாயிகள் அல்ல; இந்தியாவை பிரிக்க நினைக்கும் தீவிரவாதிகள்”...பாப் பாடகியை கடுமையாக சாடிய கங்கனா...!

Published : Feb 03, 2021, 06:12 PM IST

ரிஹானாவின் இந்த பதிவால் கோபமடைந்த பிரபல இந்தி நடிகையான கங்கனா ரணாவத் ட்விட்டரில் கடுமையாக சாடியுள்ளார்.

PREV
15
“விவசாயிகள் அல்ல; இந்தியாவை பிரிக்க நினைக்கும் தீவிரவாதிகள்”...பாப் பாடகியை கடுமையாக சாடிய கங்கனா...!

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர்.கடந்த 2 மாதமாக இந்த போராட்டம் நீடித்து வரும் நிலையில், மத்திய அரசு விவசாயிகளுடன் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துள்ளது. 

25

குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தியபோது வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

35

தற்போது மீண்டும் வரும் 6ம் தேதி அன்று தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சாலை மறியல் போராட்டங்களை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனிடையே அமெரிக்காவின் பிரபல பாப் பாடகியான ரிஹானா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

45

“நாம் ஏன் இன்னும் இப்போராட்டத்தைக் குறித்து பேசவில்லை” எனக்கூறி டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்த செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பரவி வருகின்றன. 

55

ரிஹானாவின் இந்த பதிவால் கோபமடைந்த பிரபல இந்தி நடிகையான கங்கனா ரணாவத், “யாரும் அதைப் பற்றி பேசப்போவதில்லை. ஏன் என்றால் அவர்கள் விவசாயிகளே கிடையாது. இந்தியாவை பிரிக்க நினைக்கும் பயங்கரவாதிகள். எங்கள் நாட்டையும் சீனா ஆக்கிரமித்து அமெரிக்காவைப் போல சீன காலனித்துவ நாடாக மாற்ற முயற்சிக்கிறது. அமைதியாக உட்காரவும் முட்டாளே. உங்களைப் போல நாங்கள் நாட்டை விற்பவர்கள் அல்ல” என கடுமையாக சாடியுள்ளார். 

click me!

Recommended Stories