Beast Box Office : வலிமை படத்தின் முதல் நாள் வசூலை அடிச்சுதூக்கி டாப் டக்கர் சாதனை படைத்த பீஸ்ட்

Published : Apr 14, 2022, 10:10 AM IST

Beast Box Office : மிகுந்த எதிர்பார்ப்புடன் நேற்று திரையரங்குகளில் வெளியான பீஸ்ட் படம் விமர்சன ரீதியாக சறுக்கலை சந்தித்தாலும், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது.

PREV
14
Beast Box Office : வலிமை படத்தின் முதல் நாள் வசூலை அடிச்சுதூக்கி டாப் டக்கர் சாதனை படைத்த பீஸ்ட்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நாயகியாகவும், மலையாள நடிகர் ஷான் டாம் சாக்கோ வில்லனாகவும் நடித்துள்ளார். மேலும் ரெடின் கிங்ஸ்லி, யோகிபாபு, விடிவி கணேஷ் ஆகியோர் இப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

24

தமிழில் உருவான இப்படம் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக வெளியிட்டுள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக சறுக்கலை சந்தித்தாலும், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது.

34

கொரோனா பரவலுக்கு பின் சென்னையில் வெளியான படங்களில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படமாக கடந்த பிப்ரவரி மாதம் வெளியான அஜித்தின் வலிமை திரைப்படம் இருந்தது. அந்த சாதனையை நடிகர் விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள பீஸ்ட் திரைப்படம் முறியடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

44

அதன்படி சென்னையில் வலிமை திரைப்படம் முதல் நாளில் ரூ.1.86 கோடி வசூலித்து இருந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் பீஸ்ட் திரைப்படம் ரூ.1.96 கோடி வசூலித்துள்ளது. இதன்மூலம் வலிமை படத்தின் சாதனையை பீஸ்ட் திரைப்படம் முறியடித்து முதல் இடம் பிடித்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... KGF 2 Review : ‘பீஸ்ட்’-ஐ பீட் பண்ணுமா கே.ஜி.எஃப் 2... படம் அசத்தலா? சொதப்பலா? - முழு விமர்சனம் இதோ

Read more Photos on
click me!

Recommended Stories