ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பும் விஜய்..! 'தளபதி 65 ' லேட்டஸ்ட் அப்டேட்..!

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 65ஆவது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 7-ந்தேதி முதல் ஜார்ஜியாவில் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் ஜார்ஜியாவில் இருந்து விஜய் சென்னை திரும்ப உள்ள தகவல் வெளியாகியுள்ளது.
 

லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்தது. அதன் பின்னர் சிறிது காலம் ஓய்வில் இருந்த விஜய் தற்போது 'தளபதி 65' பட ஷூட்டிங்கில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள தளபதி 65 படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் பட புகழ் நெல்சன் இயக்குறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

சட்டசபை தேர்தலின் தனது ஜனநாயக கடமையான, வாக்களிப்பதை நிறைவேற்றி விட்டு அன்று இரவே ஜார்ஜியா புறப்பட்டு சென்றார் விஜய். இதுகுறித்த புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், ஜார்ஜியாவில் சில சமயங்களில் மழை பொழுவு இருந்தாலும், படக்குழுவினர் அதனை பொருட்படுத்தாமல், அதிரடியான ஆக்சன் காட்சியும், சில முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளும் கடந்த இரண்டு வாரங்களாக படமாக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த காட்சிகளில் விஜய்யுடன் சில வெளிநாட்டு நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர் என கூறப்படுகிறது.
மேலும், ஜார்ஜியாவில் படமாக்க வேண்டிய காட்சிகள் இந்த வாரத்தோடு முடிவடைந்து விடுவதால் இந்த வார இறுதியில் விஜய்-65 படக்குழு சென்னை திரும்ப உள்ளதாக இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

Latest Videos

click me!