மாடல் அழகியான ரைசா வில்சன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானார். அதன் பின்னர் 'பியர் பிரேமா காதல்' படத்தில் நடித்தார்.
தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வரும் ரைசா வில்சன் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த புகைப்படத்தில் ரைசா முகம் முகமெல்லாம் வீங்கி காணப்படுகிறது.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கூறியபோது, ‘நேற்று எளிமையான ஃபேசியல் செய்வதற்காக அழகுக்கலை மருத்துவரிடம் சென்றேன். ஆனால் அங்கிருந்த அழகுக்கலை நிபுணர் என்னை வலுக்கட்டாயமாக வேறு சில அழகு செயல்முறைகளை எடுத்து கொள்ள கட்டாயப்படுத்தினார். அதனுடைய விளைவு தான் இது என்று தன்னுடைய முகமெல்லாம் வீங்கிய புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவ சிகிச்சை மையத்தில் முகப்பொலிவு பெற 1,27,500 ரூபாயை செலுத்தி சிகிச்சை எடுத்த பின்பு ரத்தக்கசிவு, வீக்கம் ஏற்பட்டதாக ரைசா புகார் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவ சிகிச்சை மையத்தில் இருந்து வந்த உதவி மருத்துவர்கள் ரைசாவிற்கு சிகிச்சை அளித்துள்ளனர். 10 நாட்கள் ஆன நிலையிலும் ரைசாவின் முக வீக்கம் சரியாக வில்லை என தெரிகிறது. இதையடுத்து மீண்டும் மருத்துவர் பைரவி செந்திலை அணுகிய போது, அவரே ரைசாவிற்கு வேறு சிகிச்சை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
மருத்துவர் பைரவி அளித்த சிகிச்சை தான் முக வீக்கத்துக்கு காரணம் என ரைசா குற்றச்சாட்டி இருந்தார். இந்நிலையில் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட தனக்கு 15 நாட்களுக்குள் ரூ.1 கோடி வழங்காவிட்டால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ரைசா அந்த மருத்து சிகிச்சை மையத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இதை தொடர்ந்து, மருத்துவர் பைரவி தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. அதில்... ரைசா மூன்று நாட்களுக்குள் மன்னிப்பு கேட்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னுடைய வாடிக்கையாளர்கள் மத்தியில் அவதூறு பரப்பும் வங்கியில் ரைசா நாடகமாடி வருவதாகும், இதற்காக மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது 1 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சத்துவம் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.