கொரோனா 2வது அலை காரணமாக தமிழ் திரையுலகின் டாப் ஹீரோக்களான ரஜினி, அஜித், விஜய் ஆகியோர் நடித்து வரும் படங்களுக்கு அடுத்தடுத்து புதிய சிக்கல்கள் உருவாகி வருகிறது.
ஜார்ஜியாவில் தளபதி 65 படக்குழுவினர் கடும் பனியால் துவண்டு போயுள்ளனர். தல அஜித்தின் வலிமை படக்குழுவோ கிளைமேக்ஸ் காட்சி ஷூட்டிங்கிற்காக ஸ்பெயின் செல்ல முடியாமல் திண்டாடி வருகிறது. தற்போது அந்த வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படமும் இணைந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 14ம் ஐதராபாத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த பட ஷூட்டிங் நடைபெற்றது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்த ஷூட்டிங்கின் போது அதில் பங்கேற்ற 4 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து அண்ணாத்த படக்குழு ஷூட்டிங்கை தற்காலிகமாக ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பியது. டிசம்பர் 23ம் தேதி ரத்து செய்யப்பட்ட படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2021 மார்ச் 15ல் மீண்டும் சென்னையில் தொடங்கியது.
தற்போது அண்ணாத்த படத்தின் பெரும்பாலான காட்சியில் மீண்டும் ஐதராபாத்தில் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடைபெற்று வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா 2வது அலை காரணமாக தெலங்கானாவில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அண்ணாத்த பட ஷூட்டிங்கை இறுதிக்கட்டத்தை நெறுங்கியுள்ளதால் இரவு நேர படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்க வேண்டுமென தெலங்கானா முதல்வரிடமும், ஐதராபாத் போலீசாரிடமும் அண்ணாத்த படக்குழு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொண்டு அனுமதி அளிக்கப்படும் பட்சத்தில் விரைவில் ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு ஊர் திரும்ப படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.