சென்னை திரும்பினார் விஜய்...அப்போ தளபதி 66 சூட்டிங் என்னாச்சு?

Kanmani P   | Asianet News
Published : May 24, 2022, 02:42 PM IST

ஐதராபாத்தில்  நடைபெற்று வந்த தளபதி 66 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து நடிகர் விஜய் சென்னை திரும்பியுள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது.

PREV
15
சென்னை திரும்பினார் விஜய்...அப்போ தளபதி 66 சூட்டிங் என்னாச்சு?
thalapathy 66

டாக்டர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ள இந்த படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது விஜய் 66 வது படத்தில் நடித்து வருகிறார்.

25
thalapathy 66

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி ஏற்கனவே தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான தோழா படத்தை இயக்கி இருந்தார். இதையடுத்து இரண்டாவது தமிழ் படமாக தளபதி 66 படத்தை உருவாக்கி வருகிறார். இதில் புஷ்பா படம் மூலம் ஹிட் நாயகியான ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து வருகிறார்.

35
Thalapathy 66

இயக்குனரின் முந்தைய படங்கள் போலவே செண்டிமெண்ட் அதிகமிருக்கும் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட மூத்த நடிகர்களும், ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் இரண்டு நாயகிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

45
thalapathy 66

தமன் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாடல் சென்னையில் அரபிக் குத்து பாடல் படமாக்கப்பட்ட அதே செட்டில் படம்பிடிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டாம் கட்டமாக ஐதராபத்தில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு இந்த மாத துவக்கத்தில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு. சமீபத்தில் முடிவடைந்துள்ளது.

55
thalapathy 66

இந்நிலையில் சூட்டிங் முடிவடைந்து விஜய் சென்னை திரும்பியுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் சென்னை ஏர்ப்போட்டில் மாஸ்க் அணிந்தபடி விஜய் இருக்கும் புகைப்படம் இணையத்தில் தற்போதுஉலா வருகிறது. விரைவில் ‘தளபதி 66’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories