வலிமையை தோற்கடித்த சிவகார்த்திகேயன்...வசூலை உறுதி செய்த படக்குழு!

Kanmani P   | Asianet News
Published : May 24, 2022, 01:51 PM IST

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மாஸ் காட்டி வரும் டான் படத்தின் வசூல் குறித்த ட்வீட் வைரலாகி வருகிறது.

PREV
16
வலிமையை தோற்கடித்த சிவகார்த்திகேயன்...வசூலை உறுதி செய்த படக்குழு!
don

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் மனதை வென்றெடுத்த டாக்டர் படத்தைத் தொடர்ந்து அட்லீயிடம் துணை இயக்குனராக இருந்த சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில்  சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். டான் என பெயரிடப்பட்ட இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இவர் முன்னதாக சிவகார்த்திகேயனின் டான், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்டவற்றின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் பதித்தவர்.

26
don

அனிரூத் இசையமைப்பில் உருவாகியிருந்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்த இப்படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

36
don

கல்லூரியில் நடைபெறும் நிகழ்வுகளை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் சிவாங்கி, மிர்ச்சி விஜய், முனீஸ்காந்த், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி பால சரவணன், உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அதோடு இந்த படத்தை சமீபத்தில் பார்த்த ரஜினி  பாராட்டியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார். 

46
don

 சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களான விஜய், அஜித்திற்கு இணையாகவே கலக்கி வருகிறது. அதோடு மற்ற தமிழ் ஹீரோக்களின் படங்களை காட்டிலும் சிவகார்த்திகேயனின் டான் தெலுங்கு மாநிலங்களில் அதிக வரவேற்பு பெற்று பிளாக் பஸ்டர் அடித்து வருகிறது.

56
don

தமிழ்நாட்டில் 400க்கும் அதிகமான திரையரங்குகளில் டான் எந்தவித தடையுமின்றி ஓடி வரும் டான் 11 நாட்களில் டான் திரைப்படம் உலகளவில் 96 கோடி வசூலை அள்ளி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு இந்த படம் விரைவில் 100 கோடி எட்டும் என்ற எதிர்பார்ப்பும் உளது.என்கின்றனர்.

66
don

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வலிமை படத்தை பீட் செய்துள்ளதாம்.அதாவது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் அஜித்தின் வலிமை திரைப்படத்தின் வசூலை ஓவர்டேக் செய்து விட்டது. இது குறித்து வைரலாக கலெக்சன் அப்டேட்டில் யூகேவில் பீஸ்ட் 5.6 லட்சம் பவுண்டுகளுடன் முதலிடத்திலும், டான் திரைப்படம் 1.40 லட்சம் பவுண்டுகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. வலிமை திரைப்படம் 1.39 பவுண்டுகளுடன் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. விஜய்சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல்  63 ஆயிரம் பவுண்டுகளுடன் 4ம் இடத்தில் உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories