Suriya 41 : பாலா படத்தை கண்டுகொள்ளாத சூர்யா... கைவிடப்படுகிறதா ‘சூர்யா 41’ திரைப்படம்?

Published : May 24, 2022, 01:05 PM IST

Suriya 41 : கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ‘சூர்யா 41’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் சூர்யாவுக்கும் இயக்குனர் பாலாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

PREV
14
Suriya 41 : பாலா படத்தை கண்டுகொள்ளாத சூர்யா... கைவிடப்படுகிறதா ‘சூர்யா 41’ திரைப்படம்?

எதற்கும் துணிந்தவன் படத்தின் வெற்றிக்கு பின்னர் பாலா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சூர்யா. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இப்படத்தை 2டி நிறுவனம் சார்பில் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமானார்.

24

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் கன்னியாகுமரியில் தொடங்கியது. மீனவர்களின் முக்கிய பிரச்சனையை பற்றி பேசும் படம் என்பதால் அங்கு படப்பிடிப்பை நடத்தினர். இதில் நடிகர் சூர்யா, நடிகை கீர்த்தி ஷெட்டி ஆகியோர் கலந்துகொண்டு நடித்தனர். சுமார் ஒரு மாதத்திற்கு மேல் அங்கு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

34

இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சூர்யாவுக்கும் இயக்குனர் பாலாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதன்பின்னர் நடிகர் சூர்யா, பாதியிலேயே படப்பிடிப்பை விட்டு வெளியேறியதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் படக்குழுவோ முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்ததால் தான் சூர்யா படப்பிடிப்பை விட்டு வெளியேறியதாக கூறினர்.

44

மேலும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை ஜூன் மாதம் கோவாவில் நடத்த உள்ளதாக அறிவித்தனர். ஜூன் மாதத்திற்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், சூர்யா 41 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கான வேலைகள் எதுவும் தொடங்கப்படாமல் உள்ளதால், அப்படத்தை சூர்யா கைவிட திட்டமிட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. அவர் தற்போது வாடிவாசல் படத்திற்காக பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Haryanvi singer : காணாமல் போன பாடகி உடல் சிதைந்த நிலையில் பிணமாக மீட்பு... கண்ணீரில் திரையுலகம்

Read more Photos on
click me!

Recommended Stories