தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்துள்ளன. இந்த 5 சீசன்களையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். குறுகிய காலத்திலேயே மக்களின் பேவரைட் நிகழ்ச்சியாகவும் இது மாறியது. இதற்கு காரணம் இதில் உள்ள சண்டையும், சச்சரவுகளும் தான்.
சமீபத்தில் பிக்பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சி ஓடிடிக்கென பிரத்யேகமாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சி கடந்த மாதம் முடிவடைந்தது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பாலா டைட்டில் வின்னர் ஆனார். அவருக்கு டிராபி உடன் 35 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
இந்நிலையில், விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தொடங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சர்ச்சைக்குரிய பிரபலங்களுக்கு பிக்பாஸில் தனி மவுசு உண்டு. அவர்கள் மூலம் நிறைய கண்டெண்ட் கிடைக்கும் என்கிற காரணத்தால் அத்தகைய போட்டியாளர்களை களமிறக்க பிக்பாஸ் குழு முன்னுரிமை அளிக்கும்.