விக்ரம் ஷூட்டிங் ஸ்பாட்டில் கெட்ட வார்த்தையில் கத்திய லோகேஷ் கனகராஜ்... எல்லாத்துக்கும் காரணம் கமல் தானாம்

Published : May 24, 2022, 09:13 AM IST

Lokesh kanagaraj : விக்ரம் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ள நிலையில், சமீபத்திய பேட்டியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சில சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

PREV
14
விக்ரம் ஷூட்டிங் ஸ்பாட்டில் கெட்ட வார்த்தையில் கத்திய லோகேஷ் கனகராஜ்... எல்லாத்துக்கும் காரணம் கமல் தானாம்

மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், தற்போது விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார். கமல் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் பகத் பாசில், சூர்யா, விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், நரேன், அர்ஜுன் தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 

24

அனிருத் இசையில், கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல்ஹாசன் தயாரித்துள்ளார். தமிழில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக வெளியிடப்பட உள்ளது.

34

விக்ரம் படம் வருகிற ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சி உள்ளதால் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்திய பேட்டியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சில சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

44

அதன்படி விக்ரம் படத்தின் முதல் காட்சியை கமலின் அலுவலகத்தில் படமாக்கியதாக தெரிவித்த லோகேஷ், அந்த காட்சியில் கமலின் கண்களை மட்டும் குளோஸ் அப் ஷாட் எடுத்ததாகவும், அப்போது முதன்முறையாக கமல் நடிப்பதை நேரில் பார்த்த பூரிப்பில், அந்த காட்சி முடிந்ததும் கட் சொல்வதற்கு பதிலாக கெட்ட வார்த்தையில் கத்திவிட்டதாக கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... அச்சச்சோ.. ஷூட்டிங்கின் போது எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்து- நடிகை சமந்தா நீரில் மூழ்கியதால் பதறிப்போன படக்குழு

Read more Photos on
click me!

Recommended Stories