என்னது வைகைபுயலுக்கு வழக்கமான ரோல் இல்லையா? வெளியான உதயநிதி பட சீக்ரெட்..

Kanmani P   | Asianet News
Published : May 23, 2022, 08:15 PM IST

உதயநிதியின் அடுத்த வெளியீடான மாமன்னன் படத்தில் நாயகனுக்கு தந்தையாக வடிவேலு நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

PREV
15
என்னது வைகைபுயலுக்கு வழக்கமான ரோல் இல்லையா? வெளியான உதயநிதி பட சீக்ரெட்..
vadivelu

இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி இரண்டாம் பாகத்தில் ஆரம்பித்த பிரச்சனையால், நடிகர் வடிவேலுவிற்கு  ரெட் கார்ட் தரப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பிரச்சனை முடிவுக்கு வந்துள்ள நிலையில், வடிவேலு ரீ என்ட்ரி கொடுத்துள்ளதுள்ளார். தற்போது இரு படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

25
naai sekar returns

மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகர் வடிவேலு தனது முதல் படமாக இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும், இந்த படத்தின் நாய்களுடன் வடிவேலு செம்ம கெத்தாக அமர்ந்திருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  வெளியாகி வரவேற்பை பெற்றது.

35
naai sekar returns

பீஸ்ட் பட காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஷிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின்  3-ம் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் வடிவேலு பாடயுள்ள  பாடலுக்கு நடனப் பயிற்சி அளிக்க நடிகர் பிரபுதேவா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
 

45
naai sekar returns

இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் வடிவேலு நடித்து வருகிறார். இந்த படத்தில் உதயநிதி நாயகனாகவும் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார். மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாகவும் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

55
naai sekar returns

இந்நிலையில் இந்த படத்தில்  உதயநிதியின் தந்தையாக வடிவேலு நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.மேலும்  நகைச்சுவை கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories