கடுமையான உடல்நல குறைவு..மருத்துவமனையில் டி. ராஜேந்தர்...

Kanmani P   | Asianet News
Published : May 23, 2022, 05:47 PM IST

நடிகர் சிம்புவின் தந்தையும், பிரபல இயக்குனருமான டி.ராஜேந்திரன் உடல்நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

PREV
14
கடுமையான உடல்நல குறைவு..மருத்துவமனையில் டி. ராஜேந்தர்...
T Rajendar

டி.ராஜேந்தர் கோலிவுட் துறையில் வெற்றிகரமான திரைப்படங்களை உருவாக்கியுள்ளார். தனித்துவமான நடிப்பின் மூலம் பிரபலமான ராஜேந்தர் அவர்கள் பொதுவாக இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் காட்டியவர்.

24
T Rajendar

1980 களில் அவரது அனைத்து திரைப்படங்களும் பிளாக்பஸ்டர்களாகி உள்ளார். இந்த படங்கள் பல ஆண்டுகாள வெற்றிப்படங்களாக உள்ளன. அதோடு டீ.ராஜேந்தர் தனது திரைப்படங்களில் புதிய முகங்களை அறிமுகப்படுத்தினார். இவர் மூலம் அறிமுகமான அமலா , நளினி , ஜோதி , ஜீவிதா மற்றும் மும்தாஜ் உட்பட பல நடிகைகள் பிற்காலத்தில் தென்னிந்திய சினிமாவில் வெற்றி பெற்றி நாயகியாக வலம் வந்தனர்.

34
T Rajendar

படங்களில் ஜொலித்து வந்த டி.ஆர் திமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராஜேந்தர் 1991 ஆம் ஆண்டு தியாக மருமலர்ச்சி கழகத்தை நிறுவினார். இதையடுத்து மீண்டும் திமுகவில் இணைந்த இவர்  கடந்த 2004ல் மீண்டும் திமுகவில் இருந்து விலகி அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார்.  முன்பு 1996 சட்டமன்றத் தேர்தலில் பார்க் டவுன் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் . அதோடு சிறு சேமிப்புத் திட்டத்தின் துணைத் தலைவராக ஆக்கப்பட்டார். ஆனால் அந்த  பதவியை ராஜினாமா செய்தார்.

44
T Rajendar

பிரபல நடிகர் சிம்புவின் தந்தையான இவர் சமீபகாலாமாக மகன் திருமணம் குறித்து மிகுந்த கவலையில் இருப்பதாக கூறப்பட்டது. பின்னர் சிம்புவுக்கு ஈஸ்வரன் நாயகியை மணமுடிக்க இவர் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தீடீரென உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.கடந்த நான்கு நாட்களாக மருத்துமனைவியில் அனுமதிக்கப்பட்டுள்ள டி. ராஜேந்தர், அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ள போதிலும் மேல் மருத்துவ சிகிச்சைக்காக தனது தந்தையை நடிகர் சிம்பு சிங்கப்பூருக்கு அழைத்து செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories