விஜய்..அஜித் படப்பிடிப்பு நிறுத்தம் ? ஸ்டிரைக் அறிவிப்பால் சூட்டிங் முடங்கும் அபாயம்!

Kanmani P   | Asianet News
Published : May 23, 2022, 04:51 PM ISTUpdated : May 23, 2022, 04:53 PM IST

உறுப்பினர் சேர்க்கைக்கான கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, அவுட்டோர் யூனிட் எனப்படும் வெளிப்புறப் படப்பிடிப்புக் குழுவினர் ஸ்டிரைக் அறிவித்துள்ளனர்.

PREV
14
விஜய்..அஜித் படப்பிடிப்பு நிறுத்தம் ?  ஸ்டிரைக் அறிவிப்பால் சூட்டிங் முடங்கும் அபாயம்!
cinema

சினிமா அது ஒரு தனி உலகம். இந்த உலகில் பிரமுகர்களாக  இருக்கும் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள்  பற்றி மட்டும் தான் பலரும் அறிவர் உண்மையில். பல ஆயிரக்கணக்கான தொழிலாளிகளின் மொத்த உழைப்பே சினிமா உலகின் ஆணி வேர்.  கலை, உடை அலங்காரம், மேக்கப், சாப்பாடு, என எக்கச்சக்க பிரிவினர் உழைப்பால் உருவாவே சினிமா.

24
cinema

இந்த ஒவ்வொரு குழுவிற்கும் என தனித்தனி சங்கம் உள்ளது. சங்கங்கள் சேர்வதற்காக பல லட்சம் பணம் செலுத்தி அடையாள அட்டை பெறவேண்டும் அதோடு சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட பர்சண்டேஜை ஒவ்வொரு  முறையும் அந்த சங்கங்களுக்கு டொனேஷனாக செலுத்த வேண்டும். கிட்ட 24 வகையான இந்த குழுக்களின் தலைமையாக பெப்சி என்ற அமைப்பு உள்ளது.இந்த அமைப்பிற்கு அப்போது நடிகை ரோஜாவின் கணவர் ஆர்.கே.செல்வமணி உள்ளார்.

34
cinema

சமீபத்தில் பேட்டியளித்திருந்தக ஆர்.கே.செல்வமணி விஜய், அஜித் உள்ளிட்டோரின் படப்பிடிப்பு வெளி மாநிலங்களில் நடப்பதால் உள்ளூர் தொழிலாளிகளுக்கு வேலை கிடைப்பதில்லை என்னும் புகாரை முன் வைத்திருந்தார். அதே நேரத்தில் தயாரிப்பாளர் சங்கம் சம்பள பிரச்சனை காரணமாக யூனியன் சாராத வெளியாட்களை வைத்து படப்பிடிப்பு நடத்தலாம் என்னும் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

44
cinema

இந்நிலையில் சினிமா யூனியன்களின் உறுப்பினர் சேர்க்கைக்கான கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, ஜூன் ஒன்றாம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அவுட்டோர் யூனிட் அறிவித்துள்ளனர். அதாவது  நடைபெறு  படப்பிடிப்பிற்கு அங்குள்ள லோக்கல் வாசிகள் சிலர் வேலைக்கு வைக்கப்படுவார்கள். அவ்வாறு வேலை செய்ய கட்டாயம் யூனியனில் சேர வேண்டும் என பெப்சி குறியுள்ளதாம். ஆனால் சங்கங்களில் சேர 3 லட்சம் ரூபாய் செலுத்தி நெருக்கடி கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்தே வெளியூர் படப்பிடிப்பு குழு வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. அஜித், விஜய் நடிப்பில் உருவாக்கி வரும் புதிய படங்கள்  வெளியூரில் படமாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories