நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்கி உள்ளார். பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 13-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து விஜய் நடிக்க உள்ள புதிய படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ளார். டோலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வரும் தில் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் மூலம் நடிகர் விஜய் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது.
தற்காலிகமாக தளபதி 66 என அழைக்கப்படும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் ஆகி உள்ளார். நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியானது. அதேபோல் இப்படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் நடிகர் விஜய் நடிக்கும் படத்துக்கு முதன்முறையாக இசையமைக்க உள்ளார் தமன்.