டாப் 10 ஹீரோக்களில் முதலிடத்தை பிடித்த விஜய்..ஷாக் கொடுத்த அஜித், சூர்யா நிலவரம்

Kanmani P   | Asianet News
Published : May 29, 2022, 06:40 PM IST

ஆர்மக்ஸ் மீடியா நிறுவனம் இதுகுறித்து ஒரு ஆய்வுசெய்து ஒரு டாப் 10 பட்டியல் வெளியிட்டுள்ளது. அதில் நம்ம ஊர் நாயகர்களின் இடங்கள் பற்றி கீழே பார்ப்போம்..

PREV
16
டாப் 10 ஹீரோக்களில் முதலிடத்தை பிடித்த விஜய்..ஷாக் கொடுத்த அஜித், சூர்யா நிலவரம்
top 10 heroes

சமீபத்தில் வெளியான தென் இந்திய படங்கள் பான் இந்திய படங்களாக மாறி உலகசினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. அதோடு உலகளவில் பல கோடி வசூலைக் குவித்துள்ளது. இதன் பொருட்டு இனி உருவாகும் படங்கள் பன்மொழிகளில் படங்களாகவே உருவாக்கவுள்ளது. இந்நிலையில் டாப் 10 ஹீரோக்கள் குறித்த பட்டியலை ஆர்மக்ஸ் மீடியா என்ற நிறுவனம் ஆய்வுசெய்து வெளியிட்டுள்ளது. அதன்படி விஜய் முதல் இடத்திலும், அஜித் 6வது இடத்திலும், சூர்யா 9 வது இடத்திலும் உள்ளனர். 

26
beast

விஜய் முதலிடத்தை பிடித்துள்ளது குறித்து ரசிகர்கள் குஷியில் உள்ளனர். நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படம் விமர்சங்களை பெற்ற போதிலும் ஓடிடியில் உலகளவில் பிரபலமானது. பன்மொழிகளில் வெளியான இந்த படம் உலக ரசிகர்களின் கவனத்தை இத்திருந்து. இந்த படமே விஜய்க்கு முதல் இடத்தை பெற்று தந்ததாக தெரிகிறது.  

36
junior ntr

அடுத்த இடத்தில இருக்கும் ஜூனியர் என்.டி.ஆர் சமீபத்தில் 1000-ம் கோடிக்கு மேல் வசூலை பெற்றதோடு உலக ரசிகர்களையும் பெற்றுவிட்டார். இந்த படத்தில் இவரது நடிப்பு வெகுவாக கவர்ந்து அதிக ஆதரவை பெற்று கொடுத்துள்ளது.

46
prabhas-allu arjun

3 வது இடத்தில இருக்கும் பிரபாஸ்  பாகுபலிக்கு பிறகு மிதமான வெற்றியை கண்டிருந்த போதிலும் ரசிகர்களின் பேராதரவு குறையவில்லை. 4 வது இடத்தில் இருக்கும் அல்லுஅர்ஜுனின் பிளாக்பாஸ்டர் பான் உலகப்படமாக வலம் வந்திருந்தது.

56
ajith

5வது இடத்தை அக்ஷய் குமாரும் 6வது இடத்தில் அஜித்தும் உள்ளனர். நம்ம ஊர் நம்பர் ஒன் நாயகன் என போற்றப்படும் அஜித் இந்தியா அளவில் 6வது இடத்தை பிடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

66
suriya

7வது இடத்தில கேஜிஎப் நாயகன் யாஷ், 8வது இடத்தில ராம் சரண், 9வைத்து இடத்தில சூர்யா, 10வது இடத்தில மகேஷ் பாபு உள்ளனர். சூர்யாவின் ஜெய் பீம், சூரரை போற்று, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்கள் ஹிட் கொடுத்த போதிலும் சூர்யா 9 வது இடத்தில இருப்பது ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories