தளபதி விஜய் தற்போது, தெலுங்கு பட இயக்குனர் 'வம்சி' இயக்கத்தில்... 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத், விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் படமாக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னையின் உள்ள எண்ணூர் பகுதியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு நடந்து வருகிறது. வாரிசு படத்தின் படப்பிடிப்பு அங்கு நடப்பதை அறிந்த விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் ஷூட்டிங் நடக்கும் இடத்தில் குவிய தொடங்கினர்.
ரசிகர்களின் வருகையை கட்டுப்படுத்தும் விதமாக, போலீசார் பாதுகாப்புக்கு போடப்பட்ட நிலையில்... அவர்கள் ரசிகர்களை தடியடி நடத்தி அங்கிருந்து விரட்டினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த விஜய் ரசிகர்கள், போலீசார் தடியடி நடத்த படக்குழுவினர் அனுமதி கொடுப்பதால் தானே இப்படி நடக்கிறது, வாசலில் வந்து நின்று கைகாட்டினால் கூட அது எங்களுக்கு சந்தோஷம் தான் அதை கூட செய்யவில்லை என்றால் அப்பறம் எதுக்கு எங்களுக்கு தளபதி. அவர் தேவையே இல்லை என ஆதங்கத்தை காட்டியுள்ளனர்.
மேலும் செய்திகள்: கடும் போட்டிக்கு நடுவே.. தளபதியின் 'வாரிசு' பட ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய முன்னணி நிறுவனம்..!
மேலும் சூர்யா, ரஜினி... ஆகியோரின் படப்பிடிப்பு நடைபெறும் போது, ரசிகர்கள் அவர்களை பார்க்க அனுமதிக்க படுகிறார்கள். தளபதி வந்தால் மட்டும் ரசிகர்கள் இப்படி போலீசாரால் விரட்டியடிக்கப்படுகிறார்கள் என கூறியுள்ளனர். ரசிகர்கள் பேசிய இந்த வீடியோ காட்சிகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாக விஜய், ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களை சந்திப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.