விஜய் கண்முன்னே கைது செய்யப்பட்ட ரசிகர்... ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு

Published : Dec 27, 2025, 07:10 PM IST

மலேசியாவில் உள்ள புக்கிட் ஜலீல் மைதானத்தில் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வந்த நிலையில், அதில் கலந்துகொண்ட விஜய் ரசிகர் ஒருவரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
13
Vijay Fan Arrested in Malaysia

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. ஏனெனில் இப்படத்தோடு நடிகர் விஜய் சினிமாவை விட்டே விலக உள்ளார். இப்படத்தை எச்.வினோத் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பிரியாமணி, மமிதா, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்துள்ளது. இப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படம் வருகிற ஜனவரி 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

23
ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா

ஜன நாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்தி வருகின்றனர். இந்த இசை வெளியீட்டு விழாவுக்காக தேர்வு செய்யப்பட்ட புக்கிட் ஜலீல் மைதானமே ஹவுஸ்ஃபுல் ஆனது. சுமார் 80 ஆயிரம் பேர் கலந்துகொண்டிருக்கிறார்கள். அத்தனை பேருமே டிக்கெட் வாங்கி தான் பங்கேற்றுள்ளனர். இந்த ஆடியோ லாஞ்சில் கலந்துகொண்ட ரசிகர்களுக்கு மலேசிய காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது.

33
கைதான விஜய் ரசிகர்

ஆடியோ லாஞ்சிற்கு 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அழைத்து வரக் கூடாது. இதில் விஜய்யின் கட்சியான தவெக தொடர்பான கொடி, டீசர்ட், பதாகை ஆகியவற்றை கொண்டு வரக் கூடாது. அரசியல் குறியீடு கொண்ட எந்த பொருளும் உபயோகப்படுத்த அனுமதி இல்லை. அதையும் மீறி எடுத்துச் செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்த விழாவுக்கு முன்பே மலேசியா காவல்துறை ரசிகர்களுக்கு எச்சரிககி விடுத்திருந்தது.

இந்த எச்சரிக்கையையும் மீறி, ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நடைபெறும் புக்கிட் ஜலீல் அரங்கிற்குள் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை எடுத்து வந்திருந்த விஜய் ரசிகர் ஒருவரை அலேக்காக தூக்கிச் சென்ற போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. விஜய் மைதானத்திற்குள் எண்ட்ரி ஆனபோது உற்சாக மிகுதியில் அந்த ரசிகர் தவெக கொடியை எடுத்து காட்டி இருக்கிறார். அதனால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories