இந்த நிலையில், தளபதி விஜய் திடீர் என விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன், திடீர் என சந்தித்து பேசியுள்ளதால் விரைவில் அவர் அரசியலில் குதிக்கிறாரா என்கிற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் இயங்கி வருவது அனைவரும் அறிந்தது தான். இந்த இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் நடிகர் விஜய் தனது அலுவலகத்தில் நேற்று திடீரென மக்கள் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகி உள்ளது
முதல்கட்டமாக மதுரை, திருச்சி, குமரி மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நேற்று விஜய் சந்தித்ததாகவும் இது குறித்த புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த சில வருடங்களாகவே விஜய் தன்னுடைய திரைப்படங்களில் மட்டும் அல்லாமல், ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிகளில் கூட அரசியல் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.