விஜய் தேவரகொண்டா நடிக்கும் `கிங்டம்` படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. சமீபத்தில் வெளியான டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. இந்த படத்தின் புதிய அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தை மே 30 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் திடீரென தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணங்களையும் படக்குழு தெரிவித்துள்ளது.
24
ஜூலை 4-ல் விஜய் தேவரகொண்டாவின் `கிங்டம்` படம் வெளியீடு
இதுதொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,“`மே 30 ஆம் தேதி வெளியாக இருந்த எங்கள் 'கிங்டம்' படத்தை ஜூலை 4 ஆம் தேதி வெளியிட உள்ளோம். முன்னர் திட்டமிட்டபடி மே 30 ஆம் தேதியே படத்தை வெளியிட முயற்சித்தோம். ஆனால், சமீபத்தில் நாட்டில் எதிர்பாராத சம்பவங்கள் நடந்தன. தற்போதைய சூழ்நிலையில் படத்தின் புரமோஷன்கள் மற்றும் கொண்டாட்டங்களை நடத்துவது கடினம் என்று கருதி, இந்த முடிவை எடுத்துள்ளோம். இந்த முடிவு 'கிங்டம்' படத்தை மேலும் சிறப்பாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
34
ஜூலை 4ந் தேதி கிங்டம் போட்டியாக ரிலீஸ் ஆகும் படங்கள்
சற்று தாமதமாக வந்தாலும், 'கிங்டம்' படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும். ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்த படம், உங்கள் அன்பைப் பெறும் என்று நம்புகிறோம். வெளியீட்டு தேதி மாற்றத்திற்கு தங்கள் ஆதரவை அளித்ததற்காக தில் ராஜு மற்றும் நிதின் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி` என்று படக்குழு தெரிவித்துள்ளது. ஏனெனில் அதே நாளில் நிதினின் `தம்பி` படமும் வெளியாகிறது. அதேபோல் தமிழிலும் ஜூலை 4ந் தேதி சித்தார்த்தின் 3BHK மற்றும் ராம் இயக்கத்தில் சிவா நடித்த பறந்து போ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.
விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கும் கிங்டம் படத்தை கௌதம் தின்னனூரி இயக்குகிறார். பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கிறார். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. `விஜய் தேவரகொண்டா இப்படத்தில் ஒரு பவர்புல்லான ரோலில் நடித்துள்ளார். ஜோமோன் டி. ஜான், கிரீஷ் கங்காதரன் ஆகியோரின் ஒளிப்பதிவு மிக உயர்ந்த தரத்தில் இருக்கும். தேசிய விருது பெற்ற நவீன் நூலி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். ஏற்கனவே வெளியான 'ஹ்ருதயம் லோபால' பாடல் ரசிகர்களின் மனதை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.