அதிக பாடல்களைக் கொண்ட முதல் இந்திப் படமான அது, பல ஆண்டுகளுக்கு முன்பே வந்தது. இந்தப் படம் 1932 இல் வெளியான 'இந்திரசபா'. 3 மணி நேரம் 31 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படம், பேசும் படங்களின் சகாப்தம் தொடங்கிய காலத்தில் தயாரிக்கப்பட்டது. 'இந்திரசபா' இந்தி சினிமாவில் இசையின் சகாப்தத்தைத் தொடங்கியது என்று கூறப்படுகிறது.
'இந்திரசபா' என்ற பெயரில் இரண்டு படங்கள் தயாரிக்கப்பட்டன, அவற்றில் முதலாவது மணிலால் ஜோஷி என்பவரால் தயாரிக்கப்பட்டது. இது 1925 இல் வெளியானது. இது ஊமைப் படமாகும். இரண்டாவது படம் 1932 இல் பேசும் படமாக தயாரிக்கப்பட்டது, அதில் 72 பாடல்கள் இருந்தன. பாடல்களின் பட்டியலில் 15 சாதாரண பாடல்கள், 9 தும்ரி, 4 ஹோலி பாடல்கள், 31 கஜல்கள், 2 சௌபோலாக்கள், 5 சந்தங்கள் மற்றும் 5 பிற பாடல்கள் அடங்கும்.